பெருமுயற்சி உடையோன் என்று புகழுபட்ட கோமகன்
இலங்கை வேந்தன் கயிலை மலை மேல் காதல் கொண்டு தன் கரம் இருபதினால்
பெயர்க்க நினைத்து தளர்ச்சி அடைந்து தயாபரனே என்று கையும் மெய்யும் தொழ
கருணை புரிந்த ஈசனின் மனமகிழ் நாயகியே எம் வள்ளலே  அம்மை ஆச்சியே
தளர்ச்சி அடைந்தேன் ஊழ் வினையால் தயாபரியே கை தொழுதேன் 
காதலுடன் காத்து அருள்வாயே ஆதி சக்தியே என் அம்மை ஆச்சியே போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

நாளினால் கோளினால் நாளூம் நலிந்து நாயகியே நின்னை  சரண் அடைந்து
மாலும் அயனும் போற்றிய மங்கள திருவடிகள் மேல் மாசிலா காதல் கொண்டு
காலனை அடத்திய கருணை திருவடியே என்றும் நமக்கு துணை  என்று
கருத்தினில் உறுதி கொண்டு
கற்பகமே காழி செல்வமே என்று கைதொழுது
வேண்டுகிறேன் நின் திருவருள் எனும் செல்வமே அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

நிலவினை வேண்டுகிறேன் நித்தம் அன்புடன் கைதொழுகிறேன்
அமுதினை அடியவர்க்கு அருளிய அம்மை ஆச்சி அன்பினை வியக்கின்றேன்
யாழினை முறித்து அடியவரை சிறப்பித்த அம்மை ஆச்சியை போற்றுகின்றேன்
கதவின் தாளினை திறந்து அடியவர் கவலை தீர்த்த கற்பகத்தை ஆராதிக்கிறேன்
கருணை நிறைந்த எம் அம்மை ஆச்சியின் கருணயும் புகழும் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

சஞ்சலம் நிறைந்த மனதில் அமர்ந்த எம் அன்னை சங்கர கோமதியே
அஞ்சேல் என்று அபயம் அளித்து அனுதினம் காத்து அருள்வாய் அம்பிகேயே
காலம் அறிந்து கனிவுடன் அருள் கண்ணே என் கண்மணி ஆச்சியே
ஞாலம் தொழும் தேவியே நல்லாளின் நாயகியே நல் அருள் புரி

கவலைகள் தீர வேண்டி கருணை நிறைந்த நின் திருவடியை நாடி
பிழைகளை பொறுத்து அருள்வாய் பிஞ்சகன் நாயகியே என கரம்  கூப்பி
வினைகள் தீர்க்கும்  தேவியே
வேதங்கள் போற்றும் ஈஸ்வரியே மாகாளியே
கறை மிடறு காதலியே கற்பகமே கோமதியே காழி செல்வமே  
கருணையுடன் காப்பாயே கனக நாயகியே என் அம்மை ஆச்சியே
 நின் செல்வ திருதாள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

தோற்றமும் வாழ்வும் துயர் தருவதாக அமைய
தயாபரியே தக்ஷ்ணகாளியே
ஏற்றத்தை வேண்டி
இரு கை தொழுது தொழுது கையும் மனமும்  களைத்ததே
மாற்றத்தை வேண்டி மங்கள தாயே  மகிமை நிறைந்த நின்
 திருவடியைபோற்றுகின்றேன் காற்றை இயக்கும் சக்தியே 
கருணை புரிவாய் என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)


கருணைக்கொண்டு காழி செல்வர்க்கு அமுது அருளி கள்வன் 
என காதலனை விளிக்க வைத்து
எண்ணியது நிறைவேறும் ஏற்றம் மிகு வாழ்வு வரும்
திண்ணமாய் தேவாரம் போற்றுபவர்களூக்கு
மண்ணில் நல்ல வண்ணமாய் வாழ்வார்கள் என்று மாசிலா செல்வன் மூலம் 
வரம் அருளிய வள்ளலே என் அம்மை ஆச்சியே நின் கருணையும் புகழும்  போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

தேசம் தொழும் புகழுடைய மங்கையே நேசம் கொண்ட அடியவர்களிடம்
பேசும்  தில்லை செல்வனின்  அருள் செல்வ மங்கை எம் அன்னையே
பாசம் ஏந்திய காலனை பணிய செய்த பாசமிகு மிகுந்த மங்கை



கலை இழந்த மதி மேல் காதல் கொண்டு
கருணையுடன்   நின் திருமுடி மேல் சூடிக்கொண்டு
விதி முடிந்த பாலகனை விருப்பமுடன் ஆட்கொண்டு
காலம் எல்லாம் அவர்வாழ கருணையுடன் அருள் புரிந்து
பிழைகளை பொறுத்து அருள்வாயே பிஞ்ஞகன் நாயகியே என்று இருகை தொழுது  அன்புடன் கூறும் எம் மொழியினை கேட்டும் மௌன வேடம்  கொண்டு
இருக்கிறாயே  இனியவளே திருமகளே மலைமகளே கலைமகளே  கோமகளே கோமதியே அருள்வாயே
என் அம்மை ஆச்சியே நின் பொறுமை போற்றி
(ஜெயவீரபத்திரன்)

கலைவாணியே நீ அருள்வாயே என்று கழல் பற்றினேன்
மலை வாழ் மகளே மங்களமே மவுனம் கொண்டாயோ இவ் எளியேனுக்கு அருள
சிறையில் வாடிய அமர்களை விடுவித்த சிங்கார குமரனின் அன்னையே
பிறைக்கு அருளிய எம் இறையே இவ் பிள்ளைக்கும் அருள்வாயே
குறைகள் காணா கோமளமே என் அம்மை ஆச்சியே நின் அன்பான கழல் போற்றி
(ஜெயவீரபத்திரன்)


ஈசனுடன் ஒரு பாகம் சேர்ந்து நேசமுடன் நித்தம் தொழும் அடியவர்களூக்கு அருளி பாசம் மிகுந்த தாயே ஆவுடை கோமதியே அன்பே வடிவான  என் அம்மை ஆச்சியே என்று. பரிவுடன் பணிவுடன் கழல் போற்றும் படி செய்த பரம தயாபரியே பத்திரகாளியே என் செல்வமே அம்மை ஆச்சியே போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

காலனை கழல் பணிய செய்து பாலகனுக்கு வாழ்வு அருளி
நேசமுடன் தொழும் அடியவர்களூக்கு  நாளும் அருள்பவள் என்ற வாசகத்துக்கு பொருளாகி விண்ணோர் மண்ணோர் புகழும் வடிவே
புன்னைவனத்தாயே கோமதியே புகலி தலைவியே புண்ணியமே
என் அம்மை ஆச்சியே நின்.பொன் வண்ண திருவடி போற்றி போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

அடியவர்கள் நலன் வேண்டி அருந்தவம் செய்து அரி அரன் ஒன்றாக்கிய ஆவுடையே
திருமறையும் திவ்ய பிரபந்தமும் கூறும் பொருளே ஒன்றே அவனிக்கு உணர்த்தி
கருணை வேண்டி  கழல் பணிபவர்களூக்கு என்றும் காத்து அருளுபவள்  என
பாரோர் போற்றும் பராசக்தியே  எம் ஆவுடை கோமதியே  அம்மை ஆச்சியே நின் புகழ் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

மொழிக்கும் அருளூம்

எண்ணற்ற ஏக்கங்களூடன் யான் என்று தீர்ப்பாய் என வேட்கையுடன் நாளும்
பொன் வண்ண திருவடி கொண்ட நீர் என் மனப் புண்ணை தீர்ப்பீரே
கண்ணாயிர நாயகனை காதலுடன் வாழும் கண்மணி கோமதியே
எண்ணாயிர புகழுடைய தேவியே எளியேனுக்கும் அருள்வாயே என்றும்
  என் அம்மையே ஆச்சியே நின் கருணையும் கழலும்
போற்றி போற்றியே
(ஜெயவீரபத்திரன்)







வாடா செல்லமே என்று அழைத்து  வள்ளலே நின் திருவடி கீழ் எம்மை அமர்த்தி
போக்கினேனே நின் தீவினைகளை அருளினேனே இன்று என்று மொழியயோ
யாசிக்கிறேன் நின் அன்பை நாளூம் பூசிக்கிறேன் நின் திருவடியை காதலுடன்
யோசிக்காதே செல்வமே அருள்வாயே ஆதிபராசக்தி தாயே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

காலம் மாறும் கனிவுடன் நீர் அருளூம் காலம் வரும் என்று காத்திருக்கிறேன்
நலியச்செய்யும் தீ வினைகளை மெலியசெய்து




நாட்டுக்கு வீட்டுக்கும் நன்மையாகி நானிலம் போற்றும் தலைவனாகி
வீட்டுக்கு ஒரு பிள்ளை
இப்படி வேண்டும் என்று  அவனியோர் உரைக்கும் படி
வியத்தகு வாழ்வு அருள்வாயே ஏட்டினால் தொழும் அடியவர்களுக்கு
நற்பேற்றினை அளிக்கும் நாயகி என்று நானிலத்தோர் புகழ்ந்தபடி
பாட்டினால் உம்மை தொழும் எமக்கும் அருள்வாயே என் அம்மையே  ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

தீராத  எம் ஊழ் தீவினையை தீர்த்து வைத்தாய் எம்மை மகிழ செய்தாய்
மாறாத எம் மனத்தை மங்களமே நின் மலரடி மேல் நாட்டம் கொள்ள வைத்தாய்
தேடாமல் அருளும் பொருளும் தேவியே.நிறைந்து எமக்கு அளித்தாய்
வாடசெய்யமால் வாழ்வு அளித்த வள்ளலே என் அம்மை ஆச்சியே
அம்பிகையே நின் கருணையும் பெருமையும் போற்றி போற்றிபோற்றியே
(ஜெயவீரபத்திரன்)

ஐநான்கு வடிவம் கொண்டு அமரர்கள் குறை தீர்த்து அருளிய கோமதியே
கனகமழை பெய்யுமாறு போற்றிய சங்கரர்க்கு கருணை புரிந்த கற்பகமே
நிலையில்லா மனம் கொண்ட எளியேனை நின் திருவடியை போற்றுமாறு செய்வாயே
நீர்சடை நாயகியே நித்திய மங்கள தேவியே என் அம்மை ஆச்சியே நின் கழல் போற்றி
(ஜெயவீரபத்திரன்)


காதல் கொள் எம் மேல் கண்மணியே என் அம்மை ஆச்சியே
ஊழ்வினையால் நின் அடியேன் அவதிபடுகின்றேன் அறியாயோ அன்பு சக்தியே
கானல் நீர் ஆகுமோ என் கனவுகள் கலக்குதுடன் கை தொழுகின்றேன் நான்
வேண்டுவதை அருளூம்
வேத சக்தியே அருள்வாயே
என் அம்மையே ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

நாளும் நாளும் நலிந்து நன்மை என்று தீமையை தேடி விழைந்து மகிழ்ந்து
காணும் பொருள் மேல் காதல் கொண்டு கண்ணே அழகு பெண்ணே  நின் கழலினை போற்றுவதை  மறந்து இந்த வஞ்சக வாழ்வை அருளாதே வள்ளலே
விண்ணவர் மண்ணவர் போற்றும் நின் வியத்திகு
திருவடியை போற்றுமாறு அருள் புரிந்து
ஆட்கொள்வாயே ஆர்ய சக்தியே என் அம்மை ஆச்சியே நின் கருணை போற்றி போற்றியே
(ஜெயவீரபத்திரன்)




அன்பற்றவரை  அனுதினம் தொழுது புகழ்ந்தாலும் ஆகும் பயன் உண்டோ  மனமே
இலையுடை படையவன் இனியவன்  காதலி  நறுமண குழல்  நாயகி கோமதி
நான்மறை போற்றும் புகழுடைய புகலி   தேவி நல்லோர் தொழும்  நாயகி
நானிலத்தின் அரசி
நம் அம்மை ஆச்சியை தொழும் மனமே துயர் துடைப்பாள் தினமே
(ஜெயவீரபத்திரன்)


துடைத்து எறிந்தாய் எம் துயர்களை எம்மை வருத்திய ஊழ்வினை எனும் மாயகணையை
சிரித்து எரித்த முப்புரம் போல் எம் சிந்தனையில் புகுந்து நல் வாழ்வுக்கு வழி வகுத்தாய்
தரித்த தலைமாலையும் விரித்த கூந்தலுடன் வெகுளி வடிவும் கொண்டாலும்
பரந்த உலகில் உள்ள உயிர்களூக்கு தாய் அல்லவா?
பரமதயாபரியே பவானியே
மாறாத காதலுடன் நான்
என்றும் அருளூம் குணத்துடன் நீ
மங்களதாயே  மாகாளியே
என் அம்மை ஆச்சியே கமல அன்பே போற்றி
(ஜெயவீரபத்திரன்)
கழல் மேல்
பூரண நிலவு போல்




மரணிக்க நேரத்திலும் என் மனம் நின் மங்கள  திரு நாமத்தை ஒலிக்கட்டும்

நெஞ்சில் எழும் சோகம் நீ அறியாததோ என் அம்மை ஆச்சியே
பாவியேன் என்று இந்த பாலகனை தூற்ற துணை



எங்கே இறைவன்.என்று அரக்கன் இறுமாந்துடன் கேட்க
இங்கே எம் இறைவன் என்று அடியவர் இருகை தொழுது அன்புடன் கூற
வந்தேன் என்று கர்ஜனையுடன் தூணில் இருந்து தோன்றியவளே
அடியவர் சொல் காத்த மாயவளே மங்கள நாரஸிம்மியே
என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றி போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

பொன் பொருள் புகழ் வேண்டி நின் பொன் வண்ண திருவடி போற்றுகின்றேன்
கண்ணாயிரம் உள்ள நீர் எம்மை காணாமல்  இருப்பது கண்டு மனம் கலங்குகிறேன்
என்னாவன செய்வேன் நின் திருவருள் பெற எளியேன் அறியேனே
மண்ணில் உள்ள உயிர்கள்  மாட்சிமையுடன்   போற்றும் மங்கள தாயே மாகாளியே அருள்வாயே ஆவுடையே அன்பே வடிவான என் அம்மையே அழகு  ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)



பேராயிரம் பேர் கொண்ட பெருமகளே புண்ணியவளே
நின்சீராயிரம் நாமத்தை செப்புவேன் நின் திருவருளினாலே
ஒர் ஆயிரம் இடர் கொண்ட உலக வாழ்வில் களைவாய்
துயர்களை
திருக்கரங்கள் ஆயிரம் கொண்ட திருமகளே என் அம்மைஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

வாட்டத்தை தரும் வாழ்வு ஆயினும் நாட்டமுடன் நின் திருவடியை  நாடுவேன்
ஏற்றத்தை தடுக்கும் ஊழ்வினை கண்டும் துவளாமல்
இன்முகத்துடன் நாளும்  நேசமுடன் நின் திருநாமத்தை போற்றுவேன் 
சம்சார ஆற்றினை கடக்க உதவும்  சங்கரியே என்று நின் திருவடி சரண் அடைவேன்
ஏற்றம் அருளி எம் காத்து அருளூம் தேவியே என் அம்மை ஆச்சியே போற்றி
(ஜெயவீரபத்திரன்)


நாரணனன் காணா திருவடி நாயேன் காணுவது எங்கனம்
மாயோன் சேயோன் வேயோன் மறையோன் என்று
மங்கள திருநாமங்கள் கொண்ட உம்மை 
நாயேன் விளிப்பது தகுமோ
நாதனே நரை விடையேறு
வெண்காட்டு தேவனே
தாயே என்று உம்மை விளிக்கிறேன் தன்னிகரல்லா
தேவனே நாயேன் உய்யுமாறு நல் அருள் புரிவிரே
(ஜெயவீரபத்திரன்)



கல் தூணிலிருந்து கதையின்றி தோன்றி


1எடுக்கும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெற
தடுக்கின்ற நம் தீவினை அகன்று மறைந்திட
பக்தியுடன் இரு கரம் கூப்பி கணபதி எனும்  நாமம் ஒதுவோம்
ஒம் கம் கணபதியே நமஹ
(ஜெய வீரபத்திரன்)

நல்ல நாள் என்று அருள்வாய்  நாயகியே நாளும் உம் திருவடி தொழுகின்றேன்
எந்த நாள் செய்த பாவமோ  இப்படி வருத்துகிறதே என்று இரு பொழுதும் வாடுகிறேன்
முன் செய்த பாவமும் பின் வரும்  செயலும் மாயவளே உம் செயல் அன்றோ ?
அந்தமும் நீ ஆதியும் நீ என்று இந்த அடிமைக்கு தாயே நீ  உணர்த்திய பின்பு
அடியேன் வருந்தலாமோ வாடலாமோ வள்ளலே அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

எளியவர்களை  வருத்தி ஏற்றம் எங்கே என்று அலைய வைத்து
புவியில் வாழும் புல்லர்களை பெரியோர்கள் என்று புகழ்ந்து  புகலிடம் வேண்ட செய்து
அறமற்ற  அரக்கர்களூக்கு வாழ்வு அளித்து  அமரர்களை வதைத்தது போல். ஆவுடையே நின் திருவடி போற்றும் அடியவர்களூக்கு நலிய செய்யமால்
நல் வாழ்வு அருள்வாயே என்றும்  அன்புடன் என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

தளர்ச்சி அடைந்த அடியவர் புகழ்ச்சியுடைய நின் திருவடியை போற்ற
மகிழ்ச்சி வடிவான வளர்ச்சியும் வளமும் நலமும் அருளி
எழுச்சி  அருளிய தாயே  எம் அம்மையே ஆச்சியே என்று இருகை தொழுது  கூற

தக்கனை தலை அறுத்து அய்யனை  தாண்டவம் ஆடச்செய்து
சிக்கல் சிங்கார வேலுனுக்கு வேல் அளித்து



நேசம் கொண்டு நாளூம் உம் திருவடி தொழுது 
பேசும் தெய்வமே பொற் சித்ரமே
பொன்னம்பல நாயகியே பொற்கமல தேவியே கண்மணி கோமதியே கற்பகமே அற்புத தெய்வமே
ஆதி சக்தியே  ஆவுடையே அடியேனுக்கு அருளிய என் அம்மை ஆச்சியே
அன்பே வடிவான தேவியே
கழல்களை போற்றி





எத்தனை நாளைக்கு எமக்கு இந்த சோதனை
எத்தனை நாளைக்கு எமக்கு இந்த வேதனை
உக்ரமானவளே உம்மை உணர்ந்தேன் அம்மா
சாந்தம் அடைந்து எம்மை சந்தோஷமாக வாழ வைப்பாய்
எம் அன்னை கோமதியே
(அருட்கவி திருமதி ஜெயலட்சுமி பாலசுப்பிரமணியன்)


ஜயகீர்த்திம் ஸதா தேவி
ஜய மங்கள தாரிணி
ஜகத் ரக்ஷ்ணி மஹா தேவி பாஹிமாம் பாஹிமாம்
ஶ்ரீ கோமதி

கல்லானதோ அம்மா கல்லானதோ கல்லின் மேல் நிற்பதாலே  உன் மனம் கல்லானதோ
காலமெல்லாம் என் வாழ்வில் கலக்கமே கொடுத்தாய் அம்மா கண்களில் கண்ணிர் கண்டும் கரையாதோ உன் மனம்
காரணம் என்ன அம்மா
நீ மெளமாக இருக்கிறாயே
என் வாழ்வில் மாறுதல் எப்போ நீ சொல்லும்மா
(அருட்கவி
திருமதி B.ஜெயலட்சுமி பாலசுப்பிரமணியன் அவர்கள்)

காலனை கண்டு அஞ்சிய பாலகன் தாய்மை வடிவான அய்யனை காதலுடன் தழுவ
தென் திசை மேயவன் எண் திசை  உயிர்களூம் அஞ்சும்
இமயவனை எமனை
பொன்வண்ண திருவடியால் அய்யன் எண்ணப்படி  காலனை காலால் அடர்த்திய
கற்பகமே தீவினை காலனால்  திறன் இழந்தனே அய்யன் திருவடி சரண் அடைந்தனே
அறிவாயே அம்மையே ஆதரவு தாராய் என் அம்மை ஆச்சியே நின் அன்பு போற்றி
(ஜெயவீரபத்திரன்)

நம ஸோமார்த்த தாரணே
உமா தேஹார்த்த பூரணனே
நம காமதஹனார்த்த காரணணே
காசி புராநாதனே கால பைரவ நாதனே


ரமாதி சுந்தரி பூர்ணே ரக்த பீடாதி தேவதே வரதே சூலினி துர்க்கேமஹா பைரவி  பாஹிமாம்

விரித்த குழலுடன் தெரித்த பல்லுடன் சிரித்த முகத்துடன் திகழும்  திருக்காளியே
மரித்த அரக்கன் மேல் திருவடி வைத்து மாநிலத்துக்கு நீர் உரைக்கும் பொருள் யாதோ?
அறுத்த தலைகளை அழகு மாலைகளாக சூடிக் கொண்டது ஏனோ
நித்தம் நின் திருவடி போற்றும் வாழ்வை வேண்டுகிறனே
அருளாமல் இருப்பது ஏனோ அனபு வடிவான மாகாளியே
என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)


திருவடியை காண்பது எங்கே?
திருவருளை பெறுவது எங்கனம் ?
திருமுறை ஒதி பலன் பெறுவது  எப்படி? நாடி வருவதானாலும் நாயகியே உம் அருளின்றி  திருவடியை நாட முடியுமோ நல் அருள் புரியும் தேவியே
நாடி வந்து நலம் அருள்வாயே
என் அம்மை ஆச்சியே அன்பே நின் திருவடிகள் போற்றி
(ஜெயவீரபத்திரன்)



கல்லா பிழையும் கருதா பிழையும் ஐந்து எழுத்தை சொல்லா பிழையும்
உம்மை தொழா பிழையும்
எம் பிழை செயல் ஏது? தூயவளே மாயவளே மாகாளியே கோமதியே
அருளா பிழை உமது அன்றோ
அடியேன் பிழை ஏது என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

சிரமாலா ரூபதாரிணி சிவதத்வ ஸாதனி
சிருங்கார மாய மோகினி ஸ்ருஷ்டி ஸ்திதி அந்தககாரணி
பாஹிமாம் பாஹிமாம் மஹாகாளி தேஹிமே தேஹிமே பக்த ரக்ஷ் சிந்தாமணி


திரிபுர ஸம்ஹாரி திரிநேத்ர ரூபதாரி அகோர பாப ஸம்ஹாரி ஆதி சக்தி மஹேஸ்வரி
கரமாலா பிரியகரி காசி கருணாஸாகரி
பாஹிமாம் பாஹிமாம்
மஹா காளி தேஹிமே தேஹிமே பக்த ரக்ஷ் சிந்தாமணி

கமலம் ஏந்தும் திருகரத்யுடைய காழி செல்வமே கற்பகமே
நிறம் மாறும் அய்யன் பிரிய தேவியே  பிறை சூடிய பராசக்தியே
வரம் வேண்டும் அடியேனுக்கு  அருள்வாய் அம்மையே ஆதிசகதியே
குறை அறியா கோமகளே கோமதியே என் அம்மை ஆச்சியே நின் திருவடி போற்றி
(ஜெயவீரபத்திரன்)

காணும் பொருள்  நீயாகி கண்ணே வாழும் காலம் எல்லாம் உம் மேல் காதலாகி
கடையேன் வேண்டும் இவ் வரம் அருள்வாய் காழி தாயே கற்பகமே
கரம் குவிப்பவர் நலம் விரும்பும் கருணா ஸாகரியே
காளியே ஆழி தாயே
வள்ளலே வஞ்சிக்காமல் அருள்வாயே என் அம்மை ஆச்சியே நின் கருணை போற்றி
(ஜெயவீரபத்திரன்)

மைவண்ண கூந்தல்காரி கைவளையல் அழகுகாரி
தேய்பிறை சந்திரன் சூடிய தெத்து பல் சிங்காரி
நரமாலை சூடிய அலங்காரி
நானிலம் தொழும் சிவசங்கரி
கரமாலை ஆடை கபாலி கை தொழும் அடியவர்க்கு அருளூம்  கருணாகரி
வாழி காளி வள்ளல் மாகாளி என் அம்மை ஆச்சி தான் திருத்தாள் போற்றி போற்றி
(ஜெயவீரபத்திரன்)



ஆசார கருணாதீதே ஆச்சர்ய
கருணாமயே
ஆயுர் ஆரோக்கியம்  இஷ்ட ஸித்திம் தேஹிமே ஸதா
(ஶ்ரீ சூவினி மஹா ஸ்தோத்திரம்)

நல்வாழ்வு அருளாமல் நலமடையச் செய்யமால்
இழி வாழ்வு வாழ அருள் புரிந்தாயோ என் அம்மையே
சொல் மாலை நித்தம் சூடி சுகந்த நின் திருவடியை போற்றியும் பொன்மகளே
கல்லாத இவ் கடையேன் மேல்
கருணை கொள்ளாயோ
காழி செல்வமே கற்பகமே
நில்லாத அலைப்போல் நித்தம் அல்லல் தோன்றினால் அம்மையே
அருள் இல்லாத இவ் எளியேன் எங்கனம் உய்வேன் என் அம்மையே  ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

உள்ளம் உருகி கண்ணீர் பெருகி உமையவளே நின் திருவடியே என் வாழ்வு என்று
உருகும் மனம் அருள்வாயே திருமகளே தில்லை காளியே என் அம்மை ஆச்சியே
கள்ள மனம் கொண்ட நாயேன் மேல் கருணை புரிந்து ஆட்கொள்வாயே
காழி வள்ளலே கலியுக தெய்வமே என் அம்மை ஆச்சியே நின் கருணை போற்றி போற்றியே
(ஜெயவீரபத்திரன்)
இருவர் ஒருவர் ஆகி ஒருவருககுள் இருவர் ஆகி



செல்வ திருமகளை
செங்கண் விடை மேல் அமர்ந்த பெருமகளை
அங்கையில் அனலுடன் ஆடும் அம்பலத்து நாயகனின்
குலமகளை ஆவுடையை
கொன்றை மலர் சூடிய நாயகனின் கோமகளை கோமதியை
வேண்டுகிறேன்  நின் திருவருளை அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

ஸித்தி பிரதாயை வித்மஹே சக்தி ரூபாயை தீமஹி தந்நோ  ஶ்ரீ கோமதி பிரச்சோதயாத்


ஶ்ரீ புன்னாக வனவேஸ்ர ம   ஹிஷிம் தயாயேத் ஸதா கோமதிம்

ஆசார கருணாதீதே ஆச்சர்ய கருணாமயே ஆயுர் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் இஷ்ட ஸித்திம் தேஹிமே ஸதா




நாளினால் கோளினால் நன்மை இல்லை நாயேன் புண்ணிய பிறவியும் இல்லை
மாலும் அயனும் போற்றும் மங்கல தாயே மகிமை நிறைந்த என் அம்மை ஆச்சியே
வானுயுர்ந்த வள்ளலின் நாயகியே அல்லலே வாழ்வு ஆன அடியேனை ஆட்கொள்வாயே
அன்பே வடிவான என் அம்மை ஆச்சியே அருள்வாயே நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

கமலக்கண் அழகி மிக்க கருணை நிறைந்த பொன் அரசி
மைவண்ண நிற கூந்தல்  அழகி மாசிலா அண்ணல் மையல் கொண்ட பேரழகி
வள்ளல்களூக்கு அருளும் வாஞ்சி செல்வ அரசி
வணங்கியவர்களூக்கு அருளும் வளம் நிறைந்த திருவரசி எமக்கு
ஏற்றம் தரும் எழில் அரசி
எம் இதயத்துள் குடி கொண்ட அம்மை ஆச்சி எனும் அகிலத்து அரசி
(ஜெயவீரபத்திரன்)

ஒம் ஜய ஜய ஶ்ரீ கோமதி அம்பிகாயை

ஒம் ஜய ஜய ஶ்ரீ மஹாகாளிகாயை நமஹ




காதலுடன் கைகூப்பி யான் வாழ்தல் நின் திருவருளாலே என்று நேசமுடன் நித்தம் நன்றி கூறி
காணும் பொருள் நீ ஆகி கலைமகளே கண்ணே மணியே என்று அன்புடன் உம்மை கூறி
வாழ்தல் வேண்டி வள்ளலே வளம் மிகுந்த நின் திருவடிகளை வாஞ்சையுடன்  வணங்கி
தேடுதல் என்ன தேவைகள் என்ன  அறிந்து அருளூம் தேவியே என் அம்மை ஆச்சியே நின் கருணை போற்றி
(ஜெயவீரபத்திரன்)

பாசத்துடன் அம்மை ஆச்சி பாதத்தை பற்றி பவானியே பராசக்தியே என்று   உம் திருநாமத்தை  பிதற்ற செய்து நேசமுடன் எம்மை  இரு கை தொழ செய்த தேவியே
கைலாச வாசியே கனக மழை பொழிந்த கனக வல்லி தேவியே கற்பகமே
கருணையுடன் எமக்கு அருளிய அற்புதமே என் அம்மை ஆச்சியே போற்றி

நெடுங் கனல் உருக்கொண்டு திருமாலை திகைப்பு உள்ளாக்கிய  திருமகளே
நகைப்புக்கு உள்ளான எம் வாழ்வை நாயகியே நாக கன்னிகையே
நலமுடன் வளம் பல வரம் அருள்வாயே  தஞ்சம்  என்று நின் திருவடி சரண் அடைந்த
எளியேனுக்கு தயாபரியே தக்ஷ்ண காளியே என் அம்மை ஆச்சியே போற்றி
(ஜெயவீரபத்திரன்)

சக்ரவர்த்தி திருமகளை சங்கடம் தீர்க்கும் காழி   கலைமகளை
புகழுடைய   புகலி  புண்ணிய தேவியை   புன்னை வன கோமதியை
வளம் தரும் பூமகளை அடியவரை வாழ்விக்க வந்த வள்ளலை
அனுதினமும் தொழும் அடியவர்களுக்கு அருளூம் அம்மை ஆச்சியே போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

ஏற்றுத்துடனே வாழ்வு வேண்டி இருகை ஏந்தினேன்
என் அம்மை ஆச்சியே
மாற்றத்தின் தாயே மங்கள தேவியே மாகாளியே மனம் இனங்கி அருள்வாயே
ஊட்டம் அளிக்கும் நின் திருவருளை அருள்வாய் உல்லாசியே  என் அம்மை ஆச்சியே
வாட்டமுடனே வாழும் மகனை கண்டு தாயின் மனம் மகிழுமோ  தரணியில்
நேசமுடன் எம்மை ஆட்கொள்வாயே பாசம் மிகுந்த தாயே
பவதாரிணியே பராசக்தியே பத்திரகாளியே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)


களங்கத்துடனே வாழும் நிலவு போல் கலக்குதடனே
வாழ்கின்றேன் நாளும்
இரக்கத்துடனே நீ  அருள்வாய் என்று ஏங்குகிறேன் இருபொழுதும் நானும்
வருத்தம் இன்றி வாழ வணங்கினேன் மாகாளியே நானும் நாளூம்
அறவடிவு தாயே அம்மை ஆச்சியே அருள்வாயே அன்புடன் நாள்தோறும்
(ஜெயவீரபத்திரன்)

காதலுடன் இரு கை தொழுது கண்ணே அம்மை ஆச்சியே என்று நின் கருணைக்கு ஏங்கி
வாழும் இந்த ஏழையேன் பசி போக்குவாயே வள்ளலே
வளர் செல்வமே
நல்லூர் நாயகன் நான்மறைத் தேவனுடன் நடம் ஆடிய நானிலத்தின் அரசியே
நாயேனுக்கு நல் அருள் புரிவாயே நற்தமிழ் நாயகியே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

காதலுடன் கை தொழுது கண்ணே மணியே என்று அன்புடன் உம்மை மொழிந்து
வேண்டுதல் தீரும் வரை நின் திருவடி மேல் நாட்டம் கொண்டு
வேண்டும் அடியேன் யான் இல்லை என் அம்மையே
அழகு உமையே
காலநிலை மாறினும் காதலுடன் கை தொழுவேன் என்றும் என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)





கார்முகில் வண்ண கூந்தல் நறுமண புகழை பாரோர் அறியும் படி
உரைத்த கயிலை செல்வன்
நாயகியே கற்பக கோமதியே



பேராசை கொண்டேன்  ஏறு

போற்றி  பாடுவோம் அம்மை ஆச்சிமின்  புகழ்  மாலை அன்புடன் அனுதினமும்
வாழ்த்தி வணங்குவோம் வள்ளலே  எங்களை வாழ்விக்கும் தெய்வமே என்று அனுகணமும்
சிரமாலை  சூடிய  அய்யன் திருபாகமாகிய எழில் அரசி  கோமதியை நெஞ்சில் குடி கொள்ள செய்வோம்
சிவபுரத்து ஈஸ்வரியே என் சிங்கார அம்மை ஆச்சியே என்று அனுதினமும் கூறுவது முதல் மொழியாக மரபாக  கொள்வோம்
( ஜெயவீரபத்திரன்)

பட்டாடை சூடவில்லை பவளம் தங்கம் அணிகலன்கள் அன்னையே  நின் மார்பில் இல்லை
நித்தம் அடியவர்கள் சூட விரும்பும் நறுமண மலர்கள் அம்மையே  உம் தோளிலும் கூந்தலிலும்  இல்லை
பக்தியுடன் நின் திருவடி தேடி வந்து தொழும்  ஆலயத்தில் குடி கொள்ளவும் இல்லை
மாண்டவர்கள் குடி கொள்ளும் கோயிலில் மகிழ்வுடன் குடி கொண்டு
நீர் திருநடனம் ஆடும் காரணம் அறியேனே தில்லை  செல்வியே அழகு மாகாளியே
என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றி போற்றியே
( ஜெயவீரபத்திரன்)






தன் மகனை பிறர் வருத்துவதை காணும் தாயும் உண்டோ தரணியில்
பொங்கி எழு மாகாளி தக்கன் யாகம் வதம் செய்தது போல்
போக்கிடு எம்மை வாட்டிடும் தீவினையை  நின் கோப பார்வையில்
பூட்டிடு எம்மை நின் திருக்கரத்துக்குள் காத்திடு என்றும் என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

நானிலத்தின் அரசியே நற்குண திலகவதியே மாநிலத்தோர் மண்டியிட்டு தொழும் மாகாளியே
ஆநிரை நாயகியே ஆவுடை கோமதியே அன்பே வடிவான எங்கள் அம்மை ஆச்சியே
கூன் பிறை அணிந்த ஈஸ்வரியே கூற்றவனை உதைத்த காலகாளியே
பெரும் பேற்றினை அளிக்கும் நின் திருவடி போற்ற அருள் புரிவாயே என் அம்மையே ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

கனல் எரியும் காட்டில் களிப்புடன்   அன்பர்கள் காணா திருநடனம்
வானவில் நிறங்களில் ஒளிரும் வண்ண மிகு எழில் மிகு தோற்றம்
ஈஸ்வரியே உமையவளே என்று அடியவர்கள் வாராத போற்றாத ஆலயத்தில் வாசம்
பரந்தாமன் காணா பத்து திருவடிகளும் அரக்கன் மார்பின்  மேல் பரிவுடன்
இது என்ன கருணை வெள்ளம் மாகாளியே என் அம்மையே ஆச்சியே   நின் கருணையும் கழலும் போற்றி
(ஜெயவீரபத்திரன்)

நீலநிற திருமேனி உடையவள்  நித்தம்  அடியவர் தொழும் நிமலி அவள்
கார்முகில் வண்ண கூந்தல் உடையவள் கருணா ஸாகரி என்று கீர்த்தி உடையவள்
ஆலம் உண்ட நாதனும் அரவ தலையானும் போற்றும் ஆதி சக்தி அம்மை ஆச்சி அவள்
நாளூம் கோளூம் செய்யும் தீமைகளை களைய நாளூம் அம்மை மாகாளி திருத்தாள் பணிவோம் அவள் திருவருள் பெறுவோம்
(ஜெயவீரபத்திரன்)

அருளும் கார்முகில் பாணி

அய்யனின் மனமகிழ் தேவியே

பெரும் கீர்த்தி தேவியே பெம்மான் மன மகிழும் நாயகியே  கோமதியே ஆவுடையே அருள்வாயே என் அம்மையே ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

நின் திருக் கடைக் கண் வேண்ட


நின் திருமுகத்தை  கண்டு மலரும் அடியவர்கள் மனத்தை அறியாயோ தாயே
உள்ளன்போடும் உறுதுணை   நீ என்று போற்றும் அடியவர்களுக்கு
அருளூம் பொருளும் அருளி அடியவர்களை காத்து அருள்வாயே  ஆவுடையே
ஆதி சக்தியே அன்பே வடிவான என் அம்மையே ஆச்சியே நின் திருவடிகள்
போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

திருமகளே தீவினை ஏது உம் திருவடி சரண் அடைந்து பின் என் அம்மையே ஆச்சியே


அருள்வாயே ஆவுடையே அன்பே வடிவான என் அம்மை ஆச்சியே ஆதி சக்தியே


சக்தியின் வடிவம் நீ சங்கர கோமதி நீ
எத்திக்கும் புகழுடைய எம் அம்மை ஆச்சி நீ
பாரோர் பக்தியுடன் தொழும் பத்திரகாளி நீ
அஷ்ட சித்தி நாயகி நீ அடியவர்களை காத்திடும் எங்கள் அம்மை ஆச்சி நீ



நன்மையை வேண்டி  அம்மை  கோமதியே நாளும் உம்மை தொழுது
இம்மையிலும் மறுமையிலும் எம்மை காப்பவள்  நீ என்று அன்புடன் உம்மை நினைந்து
தீமைகளை நீக்கும் திருவடி மேல் பற்று கொண்டு திருவருளுக்கு ஏங்கி திருமகளே தில்லை காளியே
திருமதி உமையே என்று நின் திருநாமத்தை பிதற்றி
பேயுடன் ஆடல் புரியும் பெம்மான் நாயகியே இந்த சேயனை ஆட்கொள்வாயே சிவபுரதாயே சீர்காழி ஈஸ்வரியே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)





கதிரின் சுடர் கண்டு
மலரும் கமலம் போல்
தாய் அன்பாலே மலரும்
உயிர்கள்
படைத்த தாய்க்கும்
பெற்ற தாய்க்கும்
வணக்கங்கள்
என்றும் தாய் அன்பை
விரும்பும் தாயின் திருவருளால் வாழும்
நேசமுடைய மகன்
பா சங்கர நாராயணன்

அடியவர் கண்களில் கண்ணீர் என்றும் என் அன்னை விரும்பாதது என்று
நின் அருள் பெற்ற அடியவர்கள் அன்புடன் கூறுகின்றனேரே
இடர்கள் நிறைந்த
இவ் உலக வாழ்வில் தொடர் அலைப்போல்
துன்பங்கள் பெருகின்றதே எம் கண்ணில் கண்ணீர் வருகின்றதே
அர்த்தமற்ற வாழ்வோ எம் வாழ்வு  என்று அஞ்சுகிறேனே அம்மையே வாஞ்சி வள்ளலே
சிரத்தையுடன் எம் சிரமங்களை தீர்த்து நின் திருவடி போற்றுமாறு அருள் புரிவாயே
ஆவுடை கோமதியே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

கரம் இருபது உடையோனை கயிலை செல்வர் கால் விரலால் அடர்த்தி கடும் துயராக்கினாய்
முகம் ஐந்து உடையோனை முத்தமிழ் நாயகன் திருக்கரங்கள் கொண்டு நான்கு ஆக்கினாய்
முவுலகை அளந்த மாயவனை நின் சீர் மிகு திருவடி காணாமல்  திகைப்பு உள்ளாக்கினாய்
நகைப்புக்கு  ஆளாக்கினாய்
ஈராறு புகழுடைய ஊரில் ஒர் ஆறு சூடிய அய்யனுடன் உல்லாசமாய் அமர்ந்து  அருள் புரிகிறாய்
தாள் நின் திருத்தாளை நித்தம் தொழுமாறு எமக்கு அருள் புரிந்த
நித்திய கல்யாண தேவியே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
( ஜெயவீரபத்திரன்)



சிவாய நம என்று சிந்திக்கிறேன் அபாயம் வேண்டாம் என்று உம்மிடம் இறைஞ்சுகிறேன்
உபாயம் ஒன்று உலகில் உய்ய வழி உள்ளன்போடு உம் திருவடியை போற்றுவதே என்று போற்றுகின்றேன்
சிறுகாயம் பெருங்காயம் ஆனாலும் வலி காலம் ஒன்று தானே என் அம்மையே
நிகழ் காலம் எதிர்காலம் என்றும் எமக்கு நீ அருளூம் காலமாகவே ஆகட்டும் என் அம்மையே ஆச்சியே
கோரும் வரம் அருள்வாய் மாகாளியே கோமதியே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

திருவருள் வேண்டி உம் திருவடியை நாடி நீர் அருளிய திருமுறையை அனுதினம் அன்புடன் பாடி
பெருவெள்ளம் சூடிய அண்ணலின் மன மகிழ் நாயகியே உம் பெருங் கருணையை  வேண்டி
அருள் வெள்ள நாயகியே அம்மை ஆச்சி கோமதியே
அனுதினம்  நின் அன்புக்கு ஏங்கி
ஒளி வெள்ளமாய் என் சிந்தனையில் நிலைத்து நின்று எம்மை ஆட்கொண்டு அருள்வாயே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றி போற்றியே
  (ஜெயவீரபத்திரன்)



கடமைகள் எமக்கு நீர்  அருளிய  கடமைகள் அறியாயோ கண்மணி கோமதியே
அக் கடமைகள்  நல் செயல் புரிய அருள்வாயே என் அம்மை ஆச்சியே
விடையவன் சடையவன் விண்எழில் தேவன் என்று மாநிலம் போற்றும்
அய்யனின மங்கல தேவியே மனமகிழ்ந்து அருள்வாயே என் அம்மையே ஆச்சியே

மாந்தராய் பிறந்த பயன் பூந்தராய் தேவனை தேவியை தொழுவதே என்று
சாந்தராய் வெண்ணீற்று வேந்தராய் வேதம் போற்றும் நாயகராய்
பால காளிதாசராய்  பாரினில் புகழுடன்  வலம் வந்த   அண்ணலுக்கு
அருள் புரிந்த அன்பு தாயே
ஆதிசக்தியே அடியேனையும் ஆட்கொண்டு  அருள்வாயே ஆவுடை  கோமதியே
அன்பே வடிவான என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றி போற்றியே
( ஜெயவீரபத்திரன்)

திருவருள் வேண்டி திருநாமத்தை செப்புகிறேன்

கதிரின் கணை இன்றி
கலகமிகு அரக்கனை கயவனை
அறவழி வெறுப்பவனை
புவனத்தின்  துயர் வடிவினை
புன் சிரிப்பை கனலாக்கி  
துயர் நீக்க எரியுற செய்த
ஆதி சிவசக்தியே அன்பே வடிவான என்
அம்மை ஆச்சியே
நின் கருணை மிகு கழல் போற்றி போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

காலமெல்லாம் காதலுடன் நின் கழல்  மேல் வாழ விரும்புகிறேன்
வாடுதல் இல்லா வாழ்வு வேண்டி  வள்ளலே நின்  திருநாமத்தை ஜெபிக்கிறேன்
அரன் மேல் நடம் ஆடிய அரங்கன் தொழும் தேவியே என் அம்மை ஆச்சியே
தேடுதலும் தேவையும் நின் திருவடி சேவையே என்று வாழ்வின் பொருள் ஆக
அருள்வாயே ஆவுடையே ஆதிகாளியே என் அம்மை ஆச்சியே என் அன்பே போற்றி
(ஜெயவீரபத்திரன்)

என் நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்து நிமலியே நீள் சடையன் நாயகியே
இந்த வஞ்சக வாழ்வு அழித்து
அருள்வாயே வள்ளலே வாஞ்சி தாயே
அஞ்சும் வெள்ளத்தை  கடந்து
அருள் மிகு நின் திருவடியை
அண்ணலை தொழ செய்த
புகலி புண்ணிய மூர்த்தியே பூந்தராய் தேவியே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

நஞ்சு தோன்றிய கடலில் அரன் மேல் துயில் கொள்ளும் நாரணரும்
பஞ்சு மலர் பாதம் உடைய அன்னை நாமகளுடன் உறையும் நான்முகரும்
அஞ்சு தலை உடைய அரணுரும் போற்றும் ஆவுடையே   என் அம்மை கோமதியே
பிஞ்சு மன தெய்வமே இந்த பிள்ளையனை ஏற்பாயே  என் அம்மையே ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

வண்ணமிகு நறுமண மலர்களை சூடிய திருவடி உடைய வாஞ்சி தாயே வள்ளலே என் அம்மை ஆச்சியே
என் எண்ணங்களை அறியாயோ ஏக்கங்களை தீராயோ ஏகவல்லியே என் தாயே
தான் பெற்ற பிள்ளைகளை வெறுக்கும் தாயும் உண்டோ
தரணியில்
அடியவர்களூக்கு அருளாத தெய்வம் உண்டோ அன்பே வடிவான அம்மையே அருள்வாயே ஆதி சக்தியே  ஆவுடைத்துறை வேதசக்தியே என் அம்மை ஆச்சியே
( ஜெயவீரபத்திரன்)


கருணை நிறைந்த தாயே எம் அம்மை ஆச்சியே எம் மேல் காதல் கொள்
பெருமை நிறைந்த செயலகளின் காரணியே இந்த எளியேனை ஆட்கொள்
வறுமையை போக்கி வளம் அருளூம் வள்ளலே வாஞ்சி தாயே நல் வரங்கள் பல  எமக்கு அருள்
உரிமையுடன் உள்ளன்போடு   உம் திருவடியை தொழ
என்றும் எம் உள்ளத்தில் குடிகொள்
இனியவளே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றி போற்றியே
( ஜெயவீரபத்திரன்)

இரண்டு  ஒன்றானதும்
ஒன்று இரண்டானதும்
இரண்டு மூன்றானதும்
மூன்றானதை நான்கு கொண்டு துதிப்பதும்
ஐந்து நான்கு ஆனுதம்

கருணையின் வடிவம் நீ என்று மாகாளியே  உம் கழலை பற்றினேன்
காக்கும் சக்தியே   அம்மை ஆச்சியே  என்று நின் திருநாமத்தை ஒதுகின்றேன்
இனியவளே இமயவளே  என்று இருகை தொழுது  நல்
வரம்  வேண்டுகிறேன்
உமையவளே திருமகளே கலைமகளே கோமகளே கோமதியே வரம் அருள்வாயே
வறியவளோ நீ குணத்திலும் செல்வத்திலும் வஞ்சிக்காதே
எம்மை வள்ளலே கெஞ்சுகிறேன் அருள்வாயே அன்புடைய தாயே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
கரங்கள் பத்து விழிகள் மூபத்து கழல்கள் பத்து

வருத்தமுடனே நானும் வாழ்கின்றனே நாளும்
இரக்கமற்ற உம் செயலால் இளைத்தேனே யானும்
அறுக்கபட்ட பறவை போல் துடிக்கின்றனே தினமும் இரக்கமற்று இருக்கிறாயே என்னை ஈண்ட தாயா நீயும் ?
உருக்கத்துடனும் உள் அன்போடும் போற்றுகின்றனே நானும்
செருக்குற்று செவிகளில் கேளாமல் இருப்பது  ஏனும்
கருத்தினில் கலந்தும் கருணை புரியாமல் இருப்பது கள்ளமன்றோ
கருணை புரிவாய் என்றும் காதலுடன் என் அம்மை ஆச்சியே உம் பெருமை செயல்கள் போற்றியே
  (ஜெயவீரபத்திரன்)

என்மாலை என் எண்ண மாலை வண்ணமிகு தமிழலால்  நின்
வடிவு அழகு நிறைந்த நின் திருவடிக்கு சூடி வசந்த்தை
வேண்டுகிறேன்
கண் ஆயிரம் உள்ள நீ என் எண்ணாயிரம் ஏக்கங்கள்
அறியாயோ அருளாயோ
பல்லாயிரம் உயிர்களின் தாயே பரம தயாபரியே
அருள்வாயே என் அம்மையே ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

வள்ளல்களூக்கு அல்லல் வந்தால் வறியவர்கள் வளம் காண்பது எங்கனம் ? அடியவர்கள்   துயர்களை தீர்க்காமல் தெய்வங்கள் அமைதி காத்தால்  வாழ்வது எங்கனம்?
கார்முகில் பொழியாமல் கழனிகள் வளம் காண்பது எங்கனம் ?
கருணை வடிவே
அம்மை ஆச்சியே நீ அருளாமல் இவ் எளியேன் வாழ்வு வளம் காணுவது எங்கனம்?
(ஜெயவீரபத்திரன்)

மாற்றம் வேண்டி மங்கள தாயே மாகாளியே உம் திருவடி போற்றுகிறேன்
ஆற்றல் வடிவே  ஆதி சக்தியே
அம்மை ஆச்சியே அருள் என்று திருநாமத்தை ஒதுகிறேன்
ஏற்றம் மிகு வாழ்வு அருள்வாய் ஏழிசை நாயகியே என் அம்மை கோமதியே
வாட்டத்தை போக்கி அழியா பல வளங்கள் அருள்வாயே வள்ளலே  என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)

அன்பே வடிவான படைத்த தாயிடம் குறை காணும் பேதையேன் 
நின் திருவடி பெருமை அறியாத  சிற்று அறிவு கொண்ட சிறியேன் எளியேன்
கற்றவனும் இல்லை நின் அருள் பெற்ற அடியவர்களின் உற்றவனும் இல்லை
பாவியேன் என்று பட்ட பெயர் கொண்டு பாழும் உலகில் வாழுகின்றேனே  வாடுகின்றேனே
ஏற்றம் காண என் செய்வேன் எங்கு செல்வேன் எழில் அரசியே கோமதியே
எம்மை ஆட்கொண்டு அருள்வாயே கருணை வடிவான  என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

ஏழையேன் எளியேன் ஏதும் அறியா சிறியேன் நின் அடியேன்
வாடினேன் வருந்துகிறேன் நாளூம்  வளம் பெற  நாடினேன் உம் திருவடிகளை
சூடினேன் சுடர் ஒளி திருவடிகளுக்கு நித்தம் தமிழ் பூமாலை பாமாலை
அன்புடன் ஆட்கொள்வாயே ஆவுடை கோமதியே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
( ஜெயவீரபத்திரன்)

வெண்தலைகள் கொண்ட மாலை விம்மும் நின் மார்பின் மேல்
தான் என்று அகந்தை கொண்டவன் தலை நின் கையில்
போர்கலை புரியும் ஆயுதங்கள் நின் தளிர் கரங்களில்
ஆ என்று அலறும் அரக்கன் மார்பின் மேல் நின் திருவடிகள் இது என்ன அருள் கோலம் என் அம்மையே ஆச்சியே (ஜெய வீரபத்திரன்)

எம் ஏக்கங்களூம் எதிர்பார்ப்புகளூம் அறியாயோ அருளாயோ என் அம்மை ஆச்சியே
பாக்களால் திரு தமிழ் பாக்களால் நின் பாதம் பணிந்து போற்றுகின்றனே பாராயோ பரம தயாபரியே
ஆக்க சக்தி நீ என்று அடியவர்களூக்கு அருளூம் அன்பு சக்தி என்று அவனியோர் கூறுகின்றனரே
அருள்வாயே மாகாளியே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)


கலை உலக நாயகியே கருணையே வடிவான என் அம்மை ஆச்சியே நின்
கழலே துணை என்று வாழும். இவ் எளியேனுக்கு கருணை புரிவாயே கற்பகமே
இலையுதிர் காலம் பின் வரும் வசந்த காலம் போல் நல் வாழ்வு அருள்வாயே தாயே
நிலவுலகில் நீயே துணை என்றும் எமக்கு ஆவுடை கோமதியே என் அம்மை ஆச்சியே
( ஜெய வீரபத்திரன்)

கருணையின் வடிவம் நீ இல்லையா
எம்மை காத்திட மனம் இல்லையா
என் வேதனை யாவும் புரியாதோ
வேடிக்கை தான் இதுவோ அம்மா
( தவத்திரு திரு கோமதிதாச ஸ்வாமிகள்)
அன்னைக்கு இலக்கணம் என்னம்மா
அன்புக்கு தானா பஞ்சம் அம்மா
கொடுத்திட இதுவும் குறைந்திடுமோ
தடுத்திட வருபவர் யார் கூறு அம்மா
அன்னையே நீ அறியாயோ அபயம் அளித்து அருளாயோ
( தவத்திரு திரு கோமதிதாச ஸ்வாமிகள்)

சம்போ சிவா  சங்கடங்கள் தீரும் அய்யனே
எனது கவலை தீரும் அய்யனே சம்போ சிவா
உனது மகிமை அறிபவர் யார் அய்யா சம்போ சிவா
உனது மகிமை அறிபவர் யார் அய்யா
(திருமதி சீதாலட்சுமி  வெங்கடாசல சாஸ்தரிகள்)

அருள் மணி அய்யனே ஆவுடைத்துறை செல்வனே அழகனே
என உடல் பிணி போக்கி அருள்வாய் பொன்னம்பல தேவனே
பொற் தாள நாயகனே
எக்காலம் வாழும் தேவனே
ஏழ் இசை செல்வனே
என் அன்பனே திருஞானசம்பந்தர் பெருமானே நின் திருவடிகள் போற்றி
( ஜெய வீரபத்திரன்)

கடல் அடியில் சென்ற அடியவரை காத்த பெருமை மிகு திருவடிகள் போற்றி
காலனை தடுத்து பாலகனை காத்த கருணைமிகு திருவடிகள் போற்றி
அடியவர்க்கு தூது சென்ற அழகு உமை நேசன் திருவடிகள் போற்றி
அண்ணல் ஞானசம்பந்தர்க்கு அமுது வழங்கிய அம்மை அப்பன் திருவடிகள் போற்றி
( ஜெய வீரபத்திரன்)

கடலில் கரைத்த உப்பை காண்பது ஏது அன்னையே
என் கர்ம வினைகள் தீரும் காலம் எப்போது கருணைக்கடலே
கந்தனின் அன்னையே  காத்திருக்கிறேன் நின் திருவருளூக்காக காலம் தாழ்த்தாமல் கருணை புரிவாய் என் அம்மையே ஆச்சியே
( ஜெய வீரபத்திரன்)

என்று தீரும் என் தீவினை
வந்து அருளாயோ நல் வரம் தனை
வாடி வருந்தி வழி தெரியாமல் தவிக்கும்
எமக்கு அருளாயோ
வானவர்கள் துயர் தீர்த்த வள்ளலே வடிவுடை நாயகியே
வக்ர காளியே
நல் வரங்களூம் அழியா வளங்களூம் அருள்வாய் என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்).

நாள்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாக ஒடிக் கொண்டிருக்கனவே
வன் தொண்டர் நாதனின் நாயகியே வணங்கினேன் நின் திருவடிகளை
திரு சிவபுரநாயகியே சீக்கிரம் அருள்வாய் என் அம்மையே ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

கார்கால கருமேகம் கதிரை மறைத்து போல் என்
கர்ம வினைகள்  நின் அருள் கதிரை மறைக்கின்றதோ?
கர்ம வினைகள் போக்குவாய் கவலை தீர்ப்பாய்
கருணை புரிவாய் காத்து அருள்வாய்  கமலவல்லியே காமாட்சியே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)




என் உள்ளக் குமுறள்களையும் உடல் நலிவுகளையும் அறியாத அன்னையா நீ ?
அண்ணலின் உட்குறிப்பை உணர்ந்து புன் சிரிப்பால் கோட்டையை எரித்த  புன்னைவனத் தாயே கோமதியே
உம் புன் சிரிப்பால் எம் தீவினைகளை எரிப்பாயே துயர் தீர்ப்பாயே காப்பாயே  என் அம்மையே ஆச்சியே
( ஜெய வீரபத்திரன்)


மஞ்சள் நிறத்தவள் மங்களம் நிறைந்தவள்
கொஞ்சும் கிளி பேச்சினவள் பக்தர்கள் அஞ்சும்
துயரை துடைப்பவள்
தூயவள் என் அம்மை
அவள் ஆச்சி அம்மை அவள்
( ஜெய வீரபத்திரன்)

தையல் நாயகி அய்யன் மேல்
மையல் கொண்ட மங்கல குல நாயகி

பிணியில்லா வாழ்வு வேண்டி
பிறை சூடிய பெம்மான் நாயகியே
இணையில்லா நின் திருவடி சரண் அடைந்தேன்
விலையில்லா நின் திருவருள் நல்கி பிணியில்லா வாழ்வு என்றும் அருள்வாயே
இணையில்லா அடியவர் மேல் அன்பு கொள்ளும் என் அம்மையே ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)


ஆசார கருணாதீதே
ஆச்சிர்ய கருணாமயே
ஆயுர் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் இஷ்ட ஸித்திம் தேஹிமே ஸதா
(ஶ்ரீ சூலினி ஸ்தோத்திரம்)

தேஹி சௌபாக்கியம் ஆரோக்கியம்  தேஹி தேவி பரம் சுகம் ரூபம் ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி தவிசோ ஜஹி
(தேவி மஹாத்மியம் அர்கலா ஸ்தோத்திரம்)

காழி வள்ளல் திருவடிகள் போற்றி கற்பகமே போற்றி கலியுக ஈஸ்வரனே போற்றி கண்ணா மன்னா போற்றி

பிறப்பும் இறப்பும் எம் செயலால் ஆவது இல்லை பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்  நடக்கும் வினைகள் எம்செயலா கச்சி ஏகம்பனே கயிலை செல்வனே (பக்த கருணாகர ஸ்வாமிகள்)

ஆறுடன் ஏழு கூடியது  அம்மையே அல்லல் எம்மை ஆட்கொண்ட ஆண்டுகள்
ஊரும் நீ உறவும் நீ என்று உன் திருவடி போற்றுகின்றேனே
உதவிடாயோ உமையவளே
உலகை ஆளூம் திருமகளே கோமகளே கோமதியே
ஆதி சக்தியே அருள்வாயே அம்பிகையே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)

செம்பவள நிறக்காரி செங்கதிர் முககாரி
மங்களம் அருளூம் மாகாளி எனும் நாமம் கொண்ட மாயக்காரி
திங்கள் கங்கை சூடிய அய்யனை திருநடனம் புரிய செய்த திரிபுர சம்ஹாரி
வங்க கடல் சூழ்ந்த எழில் மிகு நகரில் குடி கொண்ட வண்ண வடிவு வள்ளல் மாகாளி
தஞ்சம் என்று சரண்டைந்தேன் சங்கரியே கோமதியே நல் வாழ்வு அருள்வாயே என் அம்மையே ஆச்சியே
( ஜெய வீரபத்திரன்)

பூமாலையும் தமிழ் பாமாலையும் நித்தம் பொன் வண்ண திருவடிகள் சாற்றி
திருமலை அரசனும்  தில்லை தேவனும் ஒன்று கூடியுள்ள உம் சன்னதியை  நாடி
அம்மா தாயே ஆச்சி அம்மா அம்மா தாயே கோமதி அம்மா என்று திருநாமத்தை ஒதி
ஒயாத அலைபோல்  நித்தம் தேவைகளூடன் இருகை தொழுது அன்புடன் யான் வேண்டுவது  அறியாயோ தயாபரியே கோமதியே
அருள்வாயே ஆதி சக்தியே
என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

ஒம் கால சம்ஹாரியே போற்றி
ஒம் கருணா ஸாகரியே போற்றி
ஒம் கிருபா ருபியே போற்றி
ஒம் ஆவுடை கோமதியே போற்றி

முண்டமால தாரிணி முகுந்த பூஜித ரூபிணி முக்தி தாரிணி
ஸர்வ கார்ய ஸித்தி தாரிணி
முத்கல கேடக தாரிணி  மூலாதார ஸ்வருபினி
பாஹிமாம் பாஹிமாம் சாமுண்டி தேஹிமே தேஹிமே பக்த ரக்ஷ் சிந்தாமணி
   (ஶ்ரீ மஹா காளி ஸ்துதி)

மக்கள் விரும்பி சூடும் மணம் மிகுந்த மலராய் படைக்கவில்லை
மணம் மிகுந்த மலரை தொடுக்கும் நாராய் படைக்கவில்வை
எவரும் பறித்து சூடா எருக்கம் பூவாய் படைத்தாய்
அம்மையே உம்மை இன்றி இப் பூவை சூடிக் கொள்ள யார்  விழைவார் என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)

நிலையற்ற பிண்டத்தை கொண்டுள்ள எனக்கு
எப் பிண்டத்தினால் ஏற்றம் வரும் என் அம்மையே
அண்டத்தை உன் பிண்டத்தில்  கொண்டுள்ள நீ உன்னை இன்றி
இப் பிண்டத்துக்கு யார் அருள்வார் என் அம்மையே ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

பொன்மாலை சூட வழி அறியாத அடியேன் மேல் கருணை கொண்டு
சொல் மாலை சூடிக் கொள்ள விழைந்தனயோ என் அம்மையே ஆச்சியே
கற்றாரும் அடியாரும் சூடிய
மாவை கோடி உண்டு பெற்றவளே
இவ் சிறியேன் சூடிய மாலை நித்தம் சூடி மகிழ்வாய் அருள்வாய் என் அம்மையே ஆச்சியே
( ஜெய வீரபத்திரன்)


கற்பகமே நின் கழலே துணை என்று அடியவர்கள் போற்றும்
கருணா சாகரமே
அற்புத திருவருள்   வேண்டி  அணு கணமும் நின் திருவடி  தொழும்
அடியவர்களூக்கு அருளூம் அற்புத கோமதியே அழகிய பாலாம்பிகியே
சித்தம் எல்லாம் நீயே என்று நின் செங்கமல திருவடி போற்றும் எளியேனுக்கு
அருள்வாயே
சிவபுரத்து நாயகியே
சிங்கார கோமதியே  என் அம்மை ஆச்சியே
உம் திருவடிகள் போற்றி போற்றியே
(ஜெய வீரபத்திரன்)

சதி இது அறியாயோ
சங்கரன் நாயகியே  நின் திருவடியே கதி என்றும் வாழும் அடியவர்கள் வாழ்வில்
விதி  எனும் வினை வருத்துவதை அறியாயோ
அந்த சதி வினையை நீக்காயோ சர்வேஸ்வரியே
சாம்பவியே

நல்விதி எழுத நான்முகனுக்கு நல் மனம் இல்லை
நலிந்தவரைகளை காக்க நாரணர்க்கு நேரம் இல்லை
நல் வரங்களை அருளூம் நாகேஸ்வரனை நெருங்க வழி தெரியவில்லை
நல் வரங்களை அருள வா நாகேஸ்வரியே என் அம்மை ஆச்சியே
  (S  ஜெயவீரபத்திரன்)

நாகத்தால் கட்டுண்ட இரையைப் போல நலிந்து வாடுகின்றேன்
நாரணியே மோகினியே தாரிணியே சூலினியே என் அன்னை கோமதியே
நாடினேன் நின் திருவடி துணையே  நாளூம் கோளூம் அருளாத நன்மைகளை
என் அம்மை ஆச்சியே
நாளூம் திருவருள் நல்கி எந்நாளூம் காப்பாயே
  (S  ஜெயவீரபத்திரன்)

அன்பு உள்ளம் கொண்ட அன்னையே உம் கையில் ஆயுதங்கள்  எதற்கு ?
அடியவர்கள்  படும் துயரம் கண்டும்  அருளிட தயக்கம்  எதற்கு ?
அனுதினம் உம்மை துதித்டும் அன்பர்களூக்கு துன்பங்கள் எதற்கு ?
அருள்வாய் துயர்  தீர்ப்பாய் ஆதரிப்பாய் என்றும் என் அம்மையே ஆச்சி
(ஜெயவீரபத்திரன்)

நலிவுற்றேன் நாணுகின்றேன் வாழ்வதற்கே
ஏன் இந்த அல்லல்  வாழ்வு என்று இரு பொழுது வருந்துகிறேன்
உமையவளே உள்ளன்போடு உம்மை போற்றுகின்றேனே
அறியாயோ அம்மையே அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(S  ஜெயவீரபத்திரன்)

தன் மகனை பிறர் வருத்தும் காணும் தாயும் உண்டோ தரணியில்
பொங்கி எழு மாகாளி தக்கன் யாகம் வதம் செய்தது போல்
போக்கிடு எம்மை வாட்டிடும் தீவினைகளை நின் கோப பார்வையில்
பூட்டிடு எம்மை நின்  கரத்துக்குள் காத்திடு என்றும் எம்மை என்அம்மையே ஆச்சியே
(S ஜெயவீரபத்திரன்)

தீது இல்லா நாயகியே திருவளர் செல்வியே திருமகளே
எம்மை வாட்டும் தீவினை போக்க திருஉள்ளம் இல்லையோ
நின்னை தடுப்பவர் உண்டோ.வள்ளல் நாயகியே
கருணை புரிவாய் என் அம்மையே ஆச்சியே
  (S  ஜெயவீரபத்திரன்)

பேரிடர் எனும் பெருங்கவலை தீர்ப்பாய் பெருமகளே புண்ணியவளே திருமகளே
யாரிடம் உரைப்பேன் என் கவலையை என் அம்மையே ஆச்சியே
ஊரிடம் உரைத்தாலும் உறவிடம் யாசித்தாலும் தீருமோ என் தீவினை உமையவளே
வாடசெய்யமால் வருத்தம் அளிக்காமல் வள்ளலே நல் வரம் அளித்து காத்து அருள்வாயே என் அம்மையே ஆச்சியே
(S.ஜெயவீரபத்திரன்)


3
காத்திருக்கும் காலங்கள் நின் திருவருளக்காக  கடல் போல் நீண்டு இருக்க
பூத்திருக்கும் விழிகள் பார்த்து பார்த்து பழுடைந்நது அடைந்ததே
உண்டு களித்து  உறங்கிட போல இப் பிறவி படைத்தாயோ  என் அம்மை ஆச்சியே
என்று தீரும் என் தீவினை என்று ஏக்கத்துடனே என் மனது ஏங்கி தவிக்க
நன்று அருள தயக்கம் ஏன் நானிலத்தின் அரசியே நல் அருள் புரிவாய்  நாராணியே
கோமதியே சாம்பவியே சங்கரியே என் அம்மை ஆச்சியே
(S.ஜெயவீரபத்திரன்)

மறையின் பொருளாய் மங்கள வடிவாய் கறைமிடறு நாயகன் காதலியாய்
வரை அரசன் மகளாய் கை தொழும் அடியவர்களூக்கு
வரம் அருளூம்  தெய்வமாய்
வள்ளல் என்று விண்ணோர் மண்ணோர் புகழும் வியத்தகு குணமாய்
எளியேன் நெஞ்சில் கொண்ட
பேரன்பு வடிவாய் விளங்கும் என் அம்மை ஆச்சியே நின் கழல் போற்றி போற்றி
(ஜெயவீரபத்திரன்)
4
காதல் கொண்டான் எம் பெருமான் என் மேல் கருணையினாலே
போற்ற செய்தான் எம் பெருமான்  திருவடிகளை அந்த பொன்அம்பலம் அருள் பெற செய்தான்
சூடிக் கொண்டான் தன் திருவடிக்கழலாக எம்மை
தன் எல்லையில்லா அன்பினாலே
நாட செய்தான் எம்மை ஆட்கொண்டான்  அவர் திருவடிகள் போற்றியே
(S.ஜெயவீரபத்திரன்)
5
ஒர் மலைத்தேவனும் ஆறுமலை அழகனும் போற்றும் ஏழுமலையானை நாடுவோம்
மேருமலையில் தோன்றிய அமுதை நல் மக்களூக்கு அளித்த நாரணரை தொழுவோம்
இந்திர மலை பெயர்த்த இனிய குழல்டைய இராதையின்  நாயகனை கீதையின் தேவனை போற்றுவோம்
திருமலையில் இரு தேவிரோடு அருள் புரியும் திருவரங்கனை சரண் அடைவோம் அவர் திருவருள் பெறுவோம்
(S.ஜெயவீரபத்திரன்)
6
போற்றுபவர் போற்றினால் தான் அருள்வாயோ என் அம்மையே
போற்றினேன் நின் திருவடியை சொல் தமிழ் பாமாலையினால்
தூற்றினேன் உம்மை நீ அருளவில்லையே என்று ஆதங்கத்துடன்
எதற்கும் இசையவில்லையே என் செய்வேன் என்
அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)

கருணை கொண்டு எம்மை  ஆட்கொள் என்று கரம் குவித்தேன்
பெருமை மிகு தேவியே எம் பிழைகளை பொறுத்து அருள் என்று போற்றுகின்றேன்
நலமிகு தேவியே நால்வர்க்கு. அருளிய  ஈஸ்வரியே நல் அருள் புரிவாய்  நாளூம்
நமச்சிவாய நாயகியே என் அம்மை ஆச்சியே நின் கருணை போற்றியே
(,ஜெயவீரபத்திரன்)

சோகமுடன் செல்லும் வாழ்வு யோகமாக மாற நின் திருவடி தொழுகின்றேன்
ஈசன் பாகத்து நாயகியே
என் மேல் பாசம் கொள்ளாயோ
தேசம் போற்றும் தேவியிடம் பேதம் உண்டோ பேசும் தெய்வமே
தேவை அறிந்து அருள்வாயே என் அம்மை ஆச்சியே நின் கருணை போற்றி
(ஜெயவீரபத்திரன்)



7
தீவினை தீரும் காலம் எப்பொழுது திருவாய் மலராயோ
அந்த திருநாளை இன்றே அருளாயோ என் அம்மையே
ஆச்சியே
திங்களூம் கங்கையும் சூடிய திருநீலகண்டர் சக்தியே
திருவருள் நல்கி தீவினை களைவாய் திருமகளே என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)

8
வெண்காட்டு நாயகியே வெங்குரு வேதவல்லியே
பூரண தேவியே
மறைக்காட்டு மாமுனிவன் உடன் உறையும் மனமகிழ் கோமதியே
தொண்டை நாட்டில் குடி கொண்ட எங்கள் குல தெய்வமே
அகண்ட அன்பு சக்தியை  என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)


திருமகளே நின்  திருமுகத்தை கண்ட பின்பும் தீராத வினை உண்டோ என் அம்மை ஆச்சியே
அருட் கரங்கள் கொண்டு அடியவர்களுக்கு நீர் அருளிய அற்புகங்கள் ஆயிரம் கோடி உள்ளதே
கலைமகளே திருமகளே மலைமகளே காழி வள்ளலே கருணை நிறைந்த  கற்பக  கோமதியே
நின் பொற்பதமே போற்றி போற்றி  என்று பூசை செய்யும்மாறு அருள் புரிவாயே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)
9
முக்கண் தேவியே முத்தமிழ் நாயகியே
கற்பகமே என்று நின் கழலை பற்றிடும் அன்பர்களூக்கு கருணையுடன் அருளூம்
காழி செல்வமே
அற்புத தெய்வமே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
10
நல்புத்தியும் இல்லை உம் மேல் உறுதியான பத்தியும் இல்லை
உம்மை அடையும் சித்தியும் தெரியவில்லை
நீயே வந்து அருளூம் யோகமும் எமக்கு இல்லை
பூரண ஞானமும் இல்லை எவ்வகை உய்வேன் என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
அருள்வாய் அன்னை நல் புத்தியும்
உம் மேல் உறுதியான பக்தியும்
உம்மை  அடையும் சித்தியும்
என்றும் உம்மை விட்டு பிரியாது இருக்கும் யோகமும்
நீயே உண்மை என்று உணரும்   ஞானமும் அருள்வாய் என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)

வள்ளலே அல்லல் தீராயோ
நல் வாழ்வு அருளாயோ வாடுகின்றேன் பாராயோ
என் செய்வேன் எளியேன்  ஏழை பங்காளியே ஏன் இந்த மௌனம்




11
அருளூம் பொருளூம் அனைத்து அருளூம்
துன்ப இருளூம்  தொலைந்து மறையும்  தூயவள் எம் அன்னை கோமதி நம் அம்மை ஆச்சி திருப்பாதம் பற்றிடும் அன்பர்க்கு
(ஜெய வீரபத்திரன்)

12
நலங்களூம் வளங்களூம் பெற நாடி வந்தேன்
நின் திருவடிக்கு
நாடி வந்தவர்க்கு நல் அருள்புரியும் நாயகியே நாராயணியே நான்முகியே நற்தமிழ் நாயகியே
நல் அருள் புரிந்து காத்தாயே என் அம்மையே ஆச்சியே
(S ஜெய வீரபத்திரன்)

13
மாயவன் தங்கையே மங்கள ருபினியே இந்த
சேயனை காக்க திருஉள்ளம் இல்லையோ
நாயேன் என்னை உம்மை இன்றி காக்க
உலகில் வேறு நல்லோர் யார் உள்ளார் என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)

இருளூம் இரவும் போல் என் வாழ்வில்
துன்பமும் துயரமும் சேர்ந்தே உள்ளது
தாயே நின் அருள் ஒளியால் துன்ப இருள்
தொலைய அருள் புரிவாயே என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
14
ஆச்சி ஆச்சி கோமதி எனும் ஆச்சி
பேச்சு பேச்சு இதுவே எங்கள் மூச்சு
சொந்தங்கள் என்ன ஆச்சி சுகங்கள் என்ன ஆச்சி
முடிவில் துன்பமே ஆச்சி
(தவத்திரு கோமதிதாச ஸ்வாமிகள்)
15
அருள்வாய் ஆவுடை நீ  எமக்கு என்றும் உம் திருவடியை நாடினேன்
வருவாய் வளம் தருவாய் எம் வாழ்வில்  என வண்ண மிகு பல கனவு கண்டேன்
உறவாய் உயிராய் துணையாய் எனக்கு நீ என்று உறுதியோடு நம்பினேன்
இரவாய் பகலாய் இரு பொழுதும் காப்பாய் எம்மை  என்றும் என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)


16
நால்வர் தொழும் தேவியே நல் அருள் புரியும் நமசிவாய நாயகியே 
நாட செய்தாய் உம்மிடம் எமக்கு நல் அருள் புரியவே என் அம்மை ஆச்சியே
நாரணியே பூரணியே ஆவுடையே  அன்பு வடிவான  என் அன்னை கோமதியே
அருள் புரிந்தாயே
ஆவுடையே என் அம்மை ஆச்சியே நின் திருவடி போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
17
காத்து அருள்வாய் காலமெல்லாம் எங்களை காழி தாயே கற்பகவல்லியே
வாழிய தாயே வள்ளலே வாஞ்சி அரசியே வணங்க செய்தாய் நின் திருவடியே
ஏழை எளியேன் என்று எண்ணாமல்  எமக்கும் அருளிய கருணாசாகரியே என் அம்மை ஆச்சியே
தாயே தயாபரியே தக்ஷ்ணகாளியே அன்னை கோமதியே நின் திருவடி போற்றியே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)

18
நவின்றேன் நாயேன் நின் திருநாமத்தை நாளூம் பொழுதும்
உழன்றேன் ஊழ் வினையால் உமையவளே உம் கருணை இன்றமையால்
சுழன்றேன் சக்கரம் போல் தீவினையின் திருக்கரத்திலே
அயர்ந்தேன் அலர்ந்தேன் ஆட்கொள்வாயே ஆவுடைத்தாயே கோமதியே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
19
வாழ்நாள் எல்வாம் யாம் வருந்த வேண்டி எம்மை படைத்தாயோ என் அம்மை ஆச்சியே
காழி கருணை வெள்ளம் ஞாலமெல்லாம் நிறைந்து ஒட
ஆழி தலைவியே ஆவுடைத்தாயே  கோமதியே அம்மைஆச்சியேஅருள்வாயே
வாழிய தாயே வள்ளலே என்று நாளும்  திருவடியை போற்றுகின்றனே
பொன்மகளே திருமகளே திருவருள் புரிவாயே என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
20
பிள்ளை மனம் கொண்ட வெள்ளை குண நாயகியே
பிறை சூடிய நாயகனுடன்  உடன் உறையும் கருணை மிகு கோமதியே
பிள்ளைகளின் குறைகளை மன்னித்து அருளாமல் தண்டிப்பது முறையோ தகுமோ தயாபரியே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)



21
அறிவுடையோனும் என்றும்    நின் திருவருள் பெற்ற பெரும் பொருள் உடையோன் என்றும்
போற்றும் வாழ்வு அருள்வாயே  பொற்கமல நாயகியே என் அம்மை ஆச்சியே
மறையின் பொருளாகி மங்கள வடிவாகி திகழும் மாகாளியே என் அம்மை ஆச்சியே
உளமாற பற்றினேன் உம் திருவடியே உமையவளே திருமகளே  கோமகளே கோமதியே அருள்வாயே
என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
22
வடசங்கரன் கோவில் நாயகியே அடியவர் வாழ்வில் இடர் தீரக்கும் இனியவளே அருளூம் வள்ளலே  அன்னை கோமதியே
இடர்கள் கடல் சூழ்ந்து இருக்க
இனியவளே உமையவளே திருமகளே கோமகளே கோமதியே
கரையை மீறாத கடல்போல்

23
நேசமுடைய எம்  தாயே அம்மை ஆச்சியே நித்தம் உம் திருவடி பூசித்து யாசிக்கிறேன் காசும் கண் கலங்கா வாழ்வும்  எம் நேசம் நிறைந்த சுற்றமும் நட்புமும்
நீண்ட ஆயுளூடன்
வாழ்வில் எல்லா நலங்களூம் வளங்களூம் பெற்று வண்ண மிகு உம் திருவடிகளை நாளூம் பூசித்து
சீர்மிகு வாழ்வு அருளிய சிங்கார கோமதியே என் அம்மை ஆச்சியே என்று திருவடி  போற்றும் படி அருள்வாயே
(ஜெய வீரபத்திரன்)
24
வடசங்கர கோவில் நாயகியே அடியவர்களை வாழ்விக்க வந்த வள்ளலே எம் அன்னை கோமதியே
நிலவு நீர் வான் வளி காற்றே
அரவு ஆளரியுடன் உடன் சூழ உள்ள எம் இறையே

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இல்லார்க்கு இல்வுலகம் இல்லை என்று
முதுமொழிக்கு  ஏற்ப நின் திருவடி தொழும் அடியவர்கள்
எவ் உலகிலும் வாழ  அருளூம் பொருளும் அருளும் என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)






25
உள் அன்பு கொண்டேன் உம் மீது நானே உமையவளே திருமகளே அறியாயோ அருளாயோ
என் அன்பை ஏற்பாயோ இகழ்வாயோ ஏகவல்லியே என் அம்மை ஆச்சியே
கள்ளன்பு இல்லை காதலுடனே மெய் அன்பு கொண்டேன் கண்மணி கோமதியே
கருணயுடன் காத்து அருள்வாயே கற்பகமே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
26
நலங்களூம் வளங்களூம் பெற நாடி வந்தேன் உம் திருவடிக்கு
நாடி வந்தவர்க்கு நல் அருள் புரியும் நாயாகியே
நாராயணியே நான்முகியே நற்தமிழ் நாயகியே
நல் அருள் புரிந்து காத்தாயே என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்
27
கருவில் உருவான நாள்முதல்
காலனிடம் செல்லும் நாள் வரை
காத்து அருளிய அன்னையே
காலனிடம் சென்ற பிறகு கவலையில்லை
காத்து அருளூம் அன்னை நீ இருக்க பயம் இல்லை என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன் )
28
வங்ககடல் நாயகியே மாகாளியே என் அம்மை ஆச்சியே போற்றி
எங்கும் நிறைந்த ஏகவல்லியே என் அம்மை ஆச்சியே போற்றி
திங்களை  சூடிய திருக்குவளை தேவியே என் அம்மை ஆச்சியே போற்றி
வண்ண நிலவே வடிவு அழகே வாஞ்சி தாயே கோமதியே வள்ளலே என் அம்மை ஆச்சியே போற்றி (ஜெய வீரபத்திரன்)
29
கோடிஸ்வரியே கோமளவல்லியே கோமகளே கோமதியே
என் அம்மை ஆச்சியே போற்றி
30
வாசம் நிறைந்த வண்ண திருவடிளை வணங்கி நேசமுடன் நித்தம் நின் திருநாமத்தை ஓதி
பாசமுடன் அம்மா தாயே ஆச்சி அம்மா என்று பரிவுடன் நின் திருவருளூக்கு ஏங்கி
ஆசையுடன் அண்ணலுக்கு அமுதை வழங்கிய ஆவுடையே அம்மை ஆச்சியே
ஆதரவு தந்து அருள்வாய் அம்மா நேசம் நிறைந்த தாயே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
31
இன்றே கடைசி ஏன்று எண்ணி உம் திருவடி தொழுகிறேன்
நன்றே செய்யும் என் அம்மையே ஆச்சியே ஆவுடையே
நாளை என்பது நிச்சியமற்றுது என்று நல்லோர் கூற்றுபடி
இன்றே எமக்கு நிறைந்த வாழ்வு விரைந்து அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
32
காலம் மாறினாலும் எம் கோலம் மாறவில்லையே
ஞாலம் தொழும் அம்மை ஆச்சியே உம்மை தொழுதும் எம் பாவம் போகவில்லையே
இலை உதிர் காலத்தின் பின் வரும் வசந்த காலம் போல்
என் வாழ்வில் வசந்தம் வாழ்வு  அருள்வாயே வள்ளலே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
33

கிருபா கடாக்ஷி ஸ்லோகம்

நமஸ்தே கருணாகரி நமஸ்தே க்ஷமாகரி நமஸ்தே பயஸ்கரி நமஸ்தே நமஸ்தே ஸர்வ லோக தயாபரி
34
பூகைலாச வித்மஹி புவன நாயகி தீமஹி தந்நோ கோமதி பிரச்சோயாத்
35
நேசமுடன் நான்  என்றும்  உம் திருவடியை  பாசமுடன் போற்றுவதே விரும்பும் வரம் அருள்வாயே
வாசமலர்களை நித்தம் நேசமுடன் உம் திருவடிகள் சூட்டி பாசமுடன் உன் நாமத்தை ஏத்தி
காத்திருக்கிறேன் உம் கருணைக்காக கமலவல்லியே கற்பக வல்லியேஅற்புத வள்ளியே ஆவுடைத்துறை தேவியே என் அம்மை ஆச்சியே போற்றி
(ஜெயவீரபத்திரன்)
36
எல்லையில்லா கருணையுடைய என் தாயே எளியோர்களூக்கும் அருளூம் என் அம்மை ஆச்சியே
தொல்லையில்லா வாழ்வு அடியவர்களூக்கு அருளூம் தூயவளே மாயவளே
இணையில்லா நின் திருவடி போற்றும் இவ் எளியேனுக்கு இனிய வாழ்வு அருள்வாயே
உறவு நீ என்று உள் அன்போடு போற்றுகிறேன் உதவிடுவாயே உமையவளே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)
37
ஈர் ஏழு லோக நாயகியே  பாரோர் தொழும் பராசக்தியே பத்ரகாளியே
ஆவூர் தாயே ஆருரான் அரசியே ஆவுடை கோமதியே அற்புத  தெய்வமே
38
புகலூர் நாயகியே புண்ணிய தலைவியே புன்னை வன கோமதியே
திங்களூர் தேவியே திருவருள் புரியும்  திருக்கடையூர் அபிராமியே
கருவூர் நாயகியே கயிலை செல்வியே கனி முத்தே  கற்பகாம்பிகியே
அறவூர் தலைவியே  அன்பு செல்வியே என் அம்மை ஆச்சியே நின் திருவடி போற்றியே
(ஜெய வீரபத்திரன்)

39
எழுந்துவிடுவாய் என் அம்மை ஆச்சியே உம்மை தொழுதிடம் அடியவர்களூக்கு அருள
துயர் தீர்க்க எழுந்து  அருள்வாய்
அடியவர் நெஞ்சங்களில் தூய வடிவான கோமதியே எல்லையில்லா கருணையே  வடிவான எழில் அரசியே  ஏழை பங்காளியே
ஏகவல்லியே  என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
40
கடலில் தோன்றும் அலைப்போல் நித்தம் வாழ்வில் கவலைகள் தோன்றினாலும்
கருணையே வடிவான என் அம்மை ஆச்சியே நின் கழலே
கதி என்று போற்றுவேன்
மழலை நான் என்று உன் மழலை நான என்று மங்கள தாயே மாகாளியே
மனம் இரங்கி அருளூம் ஆவுடை கோமதி என் அம்மை ஆச்சியே நின் திருவடி போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
41
முன்னோர் சொன்ன வழி படி நடக்கிலினேன் மூடன் என்று ஊர் போற்றும் படி வாழ்கிறேன்
நல்வழி தேடி  இவ் நாயேன் நடந்து களைத்திட்டேன் காலத்தால் ஒடுக்க பட்டேன்
நாடி வந்து அருள் புரிவாய் சங்கர கோமதியே  சரண் அடைந்தவர் துயர் தீர்க்கும் நாராயணியே
சரணம் சரணம் நின் திருவடியே சண்பை  அரசியே சர்வேஸ்வரியே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)

42
வேண்டுவது நின் திருவருளே நாடுவது  உம் திருவடியே
ஒதுவது உம் திருநாமே
பாடுவது நின் திருப்புகழ் பெருமையே பணிந்தேனே நின் பாத கமலத்தில்
ஏந்துவது  பக்தியுடன் இரு கை தொழுது நின் கருணையே
வாடசெய்வதோ  வள்ளலே  வாஞ்சையுடன் அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
43
நேசமுடைய தாயே நித்தம் நின் திருவடி தொழ அருள் புரிந்த பாச வடிவே  பவதாரிணியே
வேட வடிவு கொண்டு விசயனுக்கு அருள் புரிந்த வீரமாகாளியே விண்ணவர் தொழும்  எழில் அரசியே
நாகவடிவே நல் அருள் புரியும் தேவியே புன்னை வன தாயே புகலி அரசியே கோமதியே
சீர் மிகு  திருவடியை அன்புடன் அணுகணம் போற்ற அருள் புரிவாயே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
44
கண்ணே மணியே கற்பகமே
ஆழியின் அற்புதமே அழகின் அழகே
பொன்னே  புகழ் வடிவு உடைய பெண்ணே முத்தே மரகதமே மாணிக்கமே
விண்ணே வளியே ஒளியே எழிலிலே வியத்தகு  கருணை பொழிலிலே
எண்ணே என் எழுத்தே அடியவர்களின் சொத்தே அற்புத சித்தே என் அம்மை ஆச்சியே நின் பொற்பாதம் மேல் நான் பித்தே
(ஜெய வீரபத்திரன்)
45
சங்கர் பதுமர் நாகங்களூக்கு அருளிய சங்கர கோமதியே போற்றியே
சார்ங்கன் சங்கரன் இரு சக்திகளின் நாயகியே சங்கர நாராயணியே போற்றியே
நாக தீர்த்த நாயகியே நல்லோர் தொழும் தேவியே நாராயணி கோமதியே போற்றியே
புற்று மண் நாயகியே அன்பர்கள் போற்றும் அரவ நாயகியே அம்மை ஆச்சியே கோமதியே போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
46
நாளூம் நலமும் வளமும்
வளர நல் அருள் புரியும் என் அம்மை ஆச்சியே போற்றியே
கோளூம் நாளூம் தொழும் கோமகளே கோமதியே என் அம்மை ஆச்சியே போற்றியே
வானும் மண் அளந்த நாரணன் வடிவே என் அம்மை ஆச்சியே போற்றியே
கற்பகமே காழி நாயகியே கருணை புரிந்த தேவியே என் அம்மை ஆச்சியே போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
47
ஒப்பிலா மாமணியே ஒசைகொடுத்த நாயகியே
அப்பு அரவம் சூடி கொண்ட ஆவுடை கோமதியே
முப்புரம் எரித்த முத்தமிழ் நாயகியை
கற்பகமே நின் பொற்பதமே என்றும் எமக்கு துணை என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
48
திருவடியை மறைத்த தில்லை தேவனுடன் திருநடனம்
புரிந்து
திருவடியே துணை என்று வாழும் அடியவர்களூக்கு திருவருள் புரிந்து
திருவடியை தீண்டும் வரம் வேண்டிய அடியவர்க்கு கருணை புரிந்து
திருவடியை போற்றும் எமக்கும் அருள்வாயே தில்லை காளியே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
49
பூக்கள் கொண்டு நேசம் நிறைந்த நின பொன்னடியை போற்றுகிறேன்
பாக்கள் தமிழ் பாக்களால் தயாபரியே  உமக்கு திருமாலை சூட்டிகிறேன்
ஏக்கத்துடனே இரு கை தொழுது இறைஞ்சிகிறேன் என்று தீர்ப்பாயே எம்
தீவினை என்று
ஆக்கசக்தியே ஆதிபராசக்தியே அருள்வாயே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
50
விடியல் இல்லாத இரவு உண்டோ உம்  திருவடி தொழுத பின்
தீராத தீ வினையும்  உண்டோ
நஞ்சு உள்ள நாகத்தையும் கொஞ்சும் குமரியே கோமதியே ஈஸ்வரியே
தஞ்சம் என்று அடைந்த பின்பு இவ் எளியேனுக்கு தாயே  தயை புரிய தாமதம் ஏனோ
அபயம் என்று நாடும் அடியவர்களூக்கு அருளூம் என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)
51
எளிய வடிவும் இனிய குணம் நிறைந்த என் தாயே அம்மை ஆச்சியே
பனி போல்  மனம்  கொண்ட உம்மை அடியவர்கள் பக்தி எனும் கதிரினால்
கரைநதிடும் அற்புத சக்தியே
ஆதிசக்தியே ஆவுடைதாயே அன்பு கோமதியே
ஒன்றும் அறிந்தவனும் இல்லை உம் பெருமையை புரிந்தவனும் இல்லை
ஆயினும் ஆட்கொண்ட தயாபரியே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)
52
முத்தும் ரத்தினம் சூடிய திருவடிகள் கொண்ட முத்தமிழ் நாயகியே
பக்தனோ  பித்தனோ பாவிதானோ யான் அறியேனே பரமதயாபரியே
நித்தம் உம் திருவடியை போற்ற செய்தும் நிமலியே விமலியே கோமதியே
எத்தனை காலம் தான் எமக்கு அருளாமல்  இருப்பாயே இனியவளே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
53
கல்லிலே நீ வடிவம் கொண்டாலும் கருணையே வடிவான என் அம்மை ஆச்சி அல்லவா
சொல்லில் உள்ள உண்மை அறியாயோ சோதி வடிவான தூயவளே உமையவளே என் அம்மை கோமதியே
கள்ள மனம் கொண்ட நாயேன் ஆயினும் பிள்ளை மனம் கொண்ட தாயே இப் பிள்ளையனை வெறுப்பாயோ நீ
பிழைகளை பொறுத்து அருள்வாய் பிஞ்சகன் நாயகியே பிறை சூடிய தேவியே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
54
வாடா செந்தமிழ் மாலை நாளூம் உம் திருவடியில் சூடி
வண்ணமலரே வள்ளலே என்று அனுதினமும்  உம் திருவடியை நாடி
ஈடில்லா உம் கருணையை வேண்டி ஈஸ்வரியே கோமதியே
என்று  உம்மை துதிபாடி
இருகை தொழுது ஏந்தும் எளியேனிடம் இரக்கம் கொள்வாயே சிவகாமியே  என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
55
அறியாமை நிறைந்த அரன்கள் மேல் கொண்ட கருணையை புன்னை
வனத் தாயே கோமதியே
அடியேனிடமும் கொள்வாயே
ஆவுடைத்தாயே என் அன்னை கோமதியே
முயலாமை இல்லாமை என்று இரு ஆமைகள் எம்மிடமிருந்து வெளியேற
கடல் ஆமை வடிவும் கொண்டு ஞாலத்தை காத்து அருளிய கண்ணன் சோதரியே காத்து அருள்வாய் என் அம்மை ஆச்சியே
  (ஜெயவீரபத்திரன்)
56
பாராம்பரிய தேவதையே பகவதியே சாகம்பரியே சங்கர கோமதியே
ஆகம வடிவே ஆவுடை தாயே அல்லல் நீக்கும் அன்னை கோமதியே அற்புத தெய்வமே
சீர் மிகு வாழ்வு வேண்டி உம்மை சிந்தையில் போற்றும் அடியவர்களூக்கு
பாரோர் தொழும் வாழ்வு அருளூம் பராசக்தியே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)



வாசம் நிறைந்த வண்ண மலர்களை உம் திருவடிகளில் சாற்றி
வடிவு அழகு நிறைந்த உம் திருநாமங்களை ஏற்றி போற்றி போற்றி என்று பிதற்றி
நேசமுடன் நீ எமக்கு அருளிய செயல்களை நினைந்து நெஞ்சு உருகி
பாசமுடன் அம்மா தாயே ஆச்சி அம்மா என்று பாவியேன் அழைப்புக்கு
பரிவுடன் நாளூம் அருளூம் பராசக்தியே பரமதயாபரியே ஆதிசக்தியே
ஆவுடை நாயகியே சங்கர கோமதியே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)


முத்தின் பெருமை சூடிய பின்பு தெரியும்  பக்தியின் பெருமை தாயே நீ அருளிய பின்பு தானே அறிய முடியும்
சக்தியே அருள் சக்தியே சங்கர கோமதியே உம்மை பக்தியுடன் பணிய செய்வாயே பரமானந்த நாயகியே
வித்தையும் விதியும் உம் செயல் அன்றோ வீரபத்திர காளியே விண்ணோர் தொழும் எழில் அரசியே
எண்ணுகிறேன் ஏங்குகிறேன் உம் திருவடிக்கே சேவை செய்ய அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)

நாடி வந்து எம்மை ஆட்கொண்ட நல் அருள் புரியும் தேவியே என் தாயே அம்மை ஆச்சியே
பாடுவேன் உம திருவருள் பெருமையை பரம தயாபரியே பராசக்தியே கோமதியே
யாதுமாய்  நீ ஆகி என்னுள் சோதியான அய்யனுடன் குடி கொண்ட  காழி செல்வமே
வாழிய தாயே வள்ளலே கருணை நிறைந்த கற்பக காளியே என் அம்மை ஆச்சியே உம் பொற்கழல் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)

266
ஆசைகளினால் அல்லல் என்று அறிந்து பின்பும் அடங்க மறுக்கும் மனதினை கண்டு அஞ்சுகிறேன்
வஞ்சம் அறியா வஞ்சி கொடியே வாஞ்சி  தாயே வள்ளலே தயாபரியே தக்ஷண காளியே
தஞ்சம் என்று உம் திருவடி சரணைடந்து பின்பும் தளர்கின்றேன் மயங்குகிறேன்
தடுத்து ஆட்கொணடு அருள்வாயே  தன்னிகிரல்லா தாயே கோமதியே என் அம்மை ஆச்சியே உம் திருவடி போற்றியே
(ஜெயவீரபத்திரன்)
265
இன்னமும் சோதனையோ என் மனம் படும் வேதனை அறியாயோ அருளாயே என் அம்மை ஆச்சியே
கல் மனம் கொண்ட காரிகை என்ற கடுஞ் சொல்லுக்கு பொருள் ஆவாயோ கருணை நிறைந்த கண்மணி கோமதியே
என் நிலை அறியாயோ என் பிழை பொறுக்காயோ எழில் அரசியே என் அம்மை ஏகவல்லியே
வரைமகளே கறைமிடறு அண்ணலின் நாயகியே கருணாகரியே என் அம்மை ஆச்சியே காப்பாயே உம் திருவடி போற்றியே
( ஜெய வீரபத்திரன்)

264
உருகினேன் உருகினேன் மருகினேன் உம்  திருவடியே   மெய்  என்று பற்றினேன்
கருகுகின்றதே இவ் எழில் மரம் நின் கருணை என்ற நீர் இன்மையால் கண்மணி கோமதியே
வருகவே வருகவே வள்ளலே ஆவுடையே  அருள்தருகவே இவ் எளியேனுக்கு
பெறுகவே இவ் எளியேன் அன்பை ஏற்றுக்  கொண்டு ஆட்கொள் என் அம்மை ஆச்சியே

அடைக்கலம் நீ என்று அடியேன் உம்மை  போற்றுவதை அறியாயோ அருளாயோ என் அம்மை ஆச்சியே
படைக்கலம் இன்றி பாவி  அரக்கனை நகைத்து எரித்த எம் கண்மணி  கோமதியே நின்
கடைக்கண் பார்வை வேண்டி கழல்களை நாடினேனே கருணை புரிவாயே என் அம்மை ஆச்சியே
( ஜெய வீரபத்திரன்)


செருக்குற்ற நான்முகன் தலையை வெடுக்கென்று பறித்த வெண்காட்டு நாயகன் தலைவியே
துணுக்கு உற்றேன் துயரால் கட்டு உற்றேன் பிணியால் நடுக்குற்றேன் தீவினையால்
இரக்கம் கொண்டு எமக்கு அருள்வாயே இனியவளே இளங்காளியே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

நாடிய பொருள் கைகூடும்
நலமும் வளமும் பெருகும்
தேடும் செல்வம் திசை எங்கும் வந்து சேரும் நாடு வீடும் நலம் பெற நாடுவோம் என் அம்மை ஆச்சி கோமதியின் திருப்பாதங்களை
(ஜெயவீரபத்திரன்)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

(அம்மை ஆச்சி அருளால் அளவற்ற ஐஸ்வர்யத்துடன் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் அறவழியில்
வாழ எம் அம்மை ஆச்சி திருவருள் புரிவாள்)






253
ஈர் ஏழு வோக  அதிபதியே ஈடில்லா மகா சக்தியே  என் அம்மை ஆச்சியே
கார் முகில் வண்ண கண்ணன் போற்றும் காழி மாதாவே கற்பக கோமதியே
என் நல் எண்ணம் எல்லா ஈடு ஏற நல் அருள் புரிவாயே
உமா மகேஸ்வரியே
வணங்கும் அடியவர்களூக்கு வாரி வழங்கும் வள்ளலே வாஞ்சி தாயே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

வணக்கம் தாயே வள்ளலே வாஞ்சி திருமகளே என் அம்மை ஆச்சியே
நடுக்கமுற்ற அடியவர்கள் நின் திருவடி தொழுது நலம் பெறுகின்றனர் என்று நான்மறை கூறுகின்றதே
செருக்குற்ற அரக்கர்கள் சிரங்களை கொய்து அழகு மாலையாக சூடிய தாயே
திறம் மிகுந்த தேவியே தில்லை காளியே திருவருள் புரிவாயே அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)


252
நன்றியுடன்  நான் என்றும் கருணையுடன் நீ
நான் எண்ணியதை எல்லாம் அருளூம் என் அம்மை ஆச்சியே
வன்னி கொன்றை சூடிய வள்ளலே அல்லல் இல்லா வாழ்வு அருளூம் கோமதியே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
(S.ஜெயவீரபத்திரன்)

251
காலமெல்லாம் வாழூம் காழி தலைவி என் அம்மை ஆச்சியின் கழல் பணிந்தேன்
ஞாலம் எல்லாம் புகழூம் ஞான சம்பந்தர் தாயை திருவடி போற்றுகிறேன்
வாழிய நீ மகனே என்றும் வாழ்த்தும் வள்ளலை வாஞ்சி செல்வியை வணங்குகிறேன்
காழி கற்பகமே கருணை நிறைந்த மாகாளியே ஆவுடை கோமதியே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
250
வறியவர்களை வள்ளல்களாக ஆக்கும் கருணாகரியே  என் அம்மை ஆச்சியே இச்
சிறியேன் வாழ்வு சீரும் சிறப்பாக இருக்க திரு அருள் புரிவாயே திருமகளே தில்லை காளியே
கரிஉரி போர்த்த கயிலை செல்வருடன் காதலுடன் வாழும் கண்மணி கோமதியே
எரிதழல் நாயகியே அண்ணாமலை தேவியே உமையவளே  காப்பாயே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)


249
அணைக்குள் அடங்கா புனலை அய்யன் திருமுடியில் சூட செய்த என் அம்மை ஆச்சியே
நின் திருவருளூக்குள் அடங்கா வினையும் உண்டோ திருமகளே தில்லை காளியே 
எம் மனைக்குள் வாழும் மங்கள தாயே மகேஸ்வரியே மாகாளியே கோமதியே
உம் திருவடியே என்றும் எமக்கு துணையே எழில் அரசியே ஆவுடையே  என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)

248
கோட்டூர் நற் கொழுந்தே என்று அண்ணல் திருஞானசம்பந்தர் போற்றிய
மரிக்கொழுந்து சூடிய ஈசனின் மன மகிழ் நாயகியே மங்கள தேவியே  அம்மை ஆச்சியே
மாசிலா முத்தே மரகதமே அங்கமெல்லாம் தங்கநிறத்து மங்கையே ஆவுடை கோமதியே
ஏட்டினை ஏந்திய எம் இறைச் செல்வியே எம் பாட்டின்  பொருளாய் அமர்ந்த
பாரதியே பராசக்தியே பரம தயாபரியே ஆதி சக்தியே
கோமதியே
என் அம்மை ஆச்சியே உம்
திருவடிகள் போற்றியே
(ஜெய  வீரபத்திரன்)



அடித்து உதைத்து திருத்துதல் உண்டோ அன்னையே அடியவர்களான உம்
குழந்தைகளை வருத்தம் உடைய செயல்களை யான் செய்தாலும்


247
காலமெல்லாம் வாழும் கற்பகமே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
ஞாலத்தை காத்து அருள்வாய் ஞானசம்பந்தர் தாயே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
நேசமுடன் என்றும் எப் பிறவியிலும் காத்து அருள்கின்ற என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
வாசம் நிறைந்த வண்ண மலர்களை சூடிய புன்னைவனத்
தாயே கோமதியே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றியே
(ஜெய வீரபத்திரன்)

246
திருவருளால் தீராத தீவினையும் ஒன்று உண்டோ திருமகளே என் அம்மை ஆச்சியே
பெரு வெள்ளத்தை சடையில் சூடிய பொன் அரசன்  நாயகியே கோமதியே
இறை நீ என்று எம் இறைவி நீ இறைஞ்சுகிறேனே இரக்கம் கொள்வாயே
பிறை சூடிய நெற்றி உடையவளே இப் பிள்ளையின் பிழைகளை பொருத்து அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)


245
காக்கும் சக்தியும் கருணையே வடிவான என் அம்மை ஆச்சியே போற்றி
யாசிக்கின்றேன் நின் திருவருளை அருள்வாயே என் அம்மை மாகாளியே போற்றி
நேசிக்கின்றேன் உம்மையே எம்மை  ஆட்கொள்வாயே சிவ நேசியே போற்றி
காலமெல்லாம் காத்து அருள்வாய் கண்மணி கோமதியே என் அம்மை ஆச்சியே போற்றி
(ஜெய வீரபத்திரன்)
244
நல் வாழ்வு எமக்கு அருள்வாய் என்று  நாளூம் உம்மை  தொழுது
உம் திருமுகத்தை நோக்கி யான்
கேட்கும் கேள்விகளை அறியாயோ அருளாயோ
விடியல் இல்லா இரவும்  உண்டோ
வீணாக போகுமோ எம் வாழ்வு
விடையேறும் வீரபத்திர காளியே நல் வாழ்வு அருவாயே  என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)

243
காலம் எல்லாம் கனிவுடன் காத்து அருளூம் அன்னை நீ இருக்க
ஞாலம் எல்லாம் புகழூம் வாழ்வு அருள்வாய்  என் அம்மையே ஆச்சியே
ஆலம் உண்ட அய்யனின்  நாயகியே ஆதி சக்தியே  ஆவுடையே கோமதியே
பாதம் பணிந்த பின்பு பாராமுகம் ஏன் பத்ரகாளியே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)


242
அடியவர்களூக்கு அல்லல் தரும் தெய்வமும் உண்டோ அவனியில்
பிள்ளைகள் படும் துயரம் கண்டு மகிழும் தாயும் உண்டோ தரணியில்
என் நிலை அறிந்தும் அருளாமல் இருப்பது ஏன் என் அம்மையே ஆவுடையே
உன் நிலை அறிந்து போற்றுகிறேன் அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)

241
நீக்கமற நிறைந்த  நித்திய சக்தியே திருபாச்லாரமத்து ஆதி சக்தியே என் அம்மை ஆச்சியே
முடங்கிய வேடவன் மகளை எழில் மிகு மாற அருளிய கொச்சையவத்து கோமகன் தாயே
வேடவன் இச்சையை தீர்த்த சிவபுரத்து சிங்காரியே ஆவுடையே
தாயே தயாபரியே கோமதியே ஆவுடையே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றி
(ஜெய வீரபத்திரன்)
240
எங்கும் நீக்கமற  நிறைந்து உள்ள சக்தியே ஆதிபராசக்தியே என் அம்மை ஆச்சியே
ஆக்கமுடன் என் நெஞ்சில் அமர்ந்து அருள்புரிவாயே வேத சக்தியே  ஆவுடையே
தேக்கமைடந்த என் தீவினைகளை தீர்ப்பாயே திருவருள் புரிவாயே
பாக்களால் தமிழ் பாக்களால் நின் திருவடிக்கு புகழ் மாலை சூடிக்கொண்ட சூடரொலி தாயே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)
239
காதல் கொள் மனமே  கழூமளவளநகர் கற்பகத்தை  மேல் வாழ்தல் வேண்டி
யாதுமாகி எங்கும் நிறைந்த எம் ஈச சக்தியை அன்பு மூர்த்தியை
தீது இல்லா வாழ்வு அருளூம் தூய வடிவு சோதியாகி நின்ற
தோணிபுரத்து அரசி அம்மை ஆச்சி மேல் காதல் கொள் மனமேஅனுகணமே
(ஜெய வீரபத்திரன்)
238
கவலைகள் தீராதோ  எம் மேல் கருணையும் பிறக்காதோ கற்பகமே
அணைக்குள் அடங்கும் கடலும் உண்டோ நின் கருணைக்கும் தடங்களோ
வினை எனும் செயலுக்கு நாயகி நீ  என் மனையில் வாழூம் மங்கள தாய் நீ
உனை அன்றி இவ உலகில் யார் அருள்வார் உலகாளூம் உமையே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
237
அருள் மிகு ஆச்சி அம்மன் பாமாலை

ஊரணியே பூரணியே உலகை ஆளூம் தாரிணியே
நாரணியே நான்முகியே நல் அருள் புரியும் நாயகியே
சூலினியே மோகினியே  சுந்தரியே அன்பு  கோமதியே
மாலினியே மங்கள தாரிணியே மகிமை நிறைந்த என் அம்மை ஆச்சி நீயே (ஜெய வீரபத்திரன்)

236
வெருண்ட களிறின்  தோலை   உரித்து அதை அகன்ற இடுப்பில் ஆடையாக உடுத்தி
மருண்ட மான்விழியாலை மங்கள கோமதியை மகிழ்வுடன் புன்னைகத்து
இருண்ட சடையில்  இளம் பிறையும் வன்னியும் கங்கையும் சூடிய  அன்பனே ஆவுடை நாயகனே  எம் ஈசனே அம்மை ஆச்சியின் நேசனே  அருள்வாய் தேவனே பரமேஸ்வரனே
  (ஜெய வீரபத்திரன்)
235
வளமுடன் நலமும் வேண்டி
வாசம் நிறைந்த மலர்களை நின் திருவடிகள் சூடி
நேசமுடன் இரு கை தொழுது அம்மா தாயே ஆச்சி அம்மா என்று அனுதினமும்
பாசமுடன் இவ் பாலகன் பகிர்வதை கேளாயோ பாராயோ பரம தயாபரியே
ஆலம் உண்ட நாதனும் மண்ணை உண்ட மாயனும் போற்றும் மங்கள கோமதியே அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
234
என் கோலம் எழிலுடன் மாற என்று அருள் புரி வாய் ஏகவல்லியே என் அம்மை
ஆச்சியே
விண்ணவர் மண்ணவர் போற்றும் வெண்காட்டு நாயகியே வீரபத்திர தாயே வேத சக்தியே தயாபரியே
தன்னிகர் இல்லா தமிழால் சிவ தொண்டு புரிந்த காழி செல்வரின் தாயே கற்பக கோமதியே
எண்ணிலா பெருமைகள் உடைய எழில் அரசியே என் அம்மை ஆச்சியே எமக்கு அருள் புரிவாயே
(ஜெய வீரபத்திரன்)
235
விண் எழில் பொழில் சூழ்  பூ கையிலையில் அரசு புரியும் புன்னை வனத்தாயே கோமதியே
நின் எழில் மேல் நாட்டம் கொண்டு நித்தம் உம் திருவடிகளூக்கு
தமிழ் பாமாலை சாற்றும் 
கண்கவர்  நறுமணம் மிகுந்த
பூ மாலைகளூடன்  பொன் மாலைகளூம சூடிய தேவியே
கருணை மிகு தேவியே அற்புத தாயே அருள்வாயே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றி (ஜெய வீரபத்திரன்)

233
கங்கை நாயகனையும்  காவிரி தலைவனையும் காதலுடன் ஒர் சக்தியாக உருக் கொள் செய்து
கலக்கத்தில் இருந்த நாகர்களூக்கு கருணை புரிந்து நின் கழல் கீழ் இருக்க செய்து
கழல் போற்றும் அடியவர்களின் தீராத தீவினை தீர்த்து
திருவருள் புரிந்து
நாடிவந்து எம்மை ஆட்கொள் என்று நாளும் உம் திருநாமத்தை ஒதும் எளியவர்களூக்கு அருள் செய்யும்
கருணை நிறைந்த கண்மணி கோமதியே  என்றும் எம்மை காத்து அருளூம்   ஆவுடையே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றி
(ஜெய வீரபத்திரன்)

232
காலம் எல்லாம் வாழ கனிந்து நின் அருள் பெற்ற அடியவர்கள் உம் மேல் பாடிய கீதங்களை
ஞாலம் எல்லாம் ஒலிக்க கருணை புரிந்த கண்மணி கோமதியே ஆழி அரசியே
ஏழை எளியேன் யான்  நின் திருத்தாளை பணிந்தேனே பாராயோ  பரமதயாபரியே
ஞாலத்தில் நல்வாழ்வு வாழ வேண்டுகிறனே அருள்வாயே அன்பின் வடிவே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

231
            அருள் மிகு
    ஆச்சி அம்மன் பாமாலை
ஆடிய செல்வன் ஆரூரான் அள்பு நாயகியே ஆவுடையே உம்மை
பாடி பணியும் பக்தர்களின் பாவத்தை போக்கும் பரமதயாபரியே பத்ரகாளியே
தேடி சென்று அடையும் பொருளோ நின் திருவருளே தயாபரியே எம்மை
நாடி வந்து அருள்வாயே ஆதிசக்தியே பராசக்தியே என் அம்மை ஆச்சியே போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
230
மலர் கணை கொண்ட காமனை  எரித்த கனல் கண்ணன் நாயகியே
கற்பக கோமதியே
கர்ம வினையால் கட்டுண்ட எம் வாழ்வை நின் கருணை கனணையால்
எரிப்பாயே  காப்பாயே
இணை நின் திருவருளூக்கு இணையான துணை எது இவ் வையகத்தில் உமையவளே
எனை என்றும் வாழ்த்தி அருள் புரிவாயே வள்ளலே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றி
(ஜெயவீரபத்திரன்)
229
புகழுடைய புகலி செல்வர்க்கு அமுது அளித்த புன்னை வனத்தாயே கோமதியே
இகழுடைய வாழ்வு அடியவர்களுக்கு அருளாத இனியவளே இளங்காளியே
நிகழும் காலங்கள் நின் திருவடிக்கு சேவை செய்ய
மகிழுவுடன் அருள்வாயே மங்கள தாயே மாகாளியே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றி
(ஜெய வீரபத்திரன்)
228
போதும் இப் பிறவி என்று வாடி வருந்தி நின்திருவடியை
தேடி ஒடி உம்மை
நாடி வந்து  வேண்டுகிறேன் நாடியவர்களூக்கு நல் வரம் அருளூம் தேவியே   நாராயணியே
ஆவுடையே ஆதி சக்தியே அருள்வாயே  என்  அம்மை ஆச்சியே (ஜெய வீரபத்திரன்)
227
கண்ணனை மாயகண்ணனை மேக வண்ணனை ஆயர் குல நந்தனை
பூமகள் காதலனை இராதையின் நேசனை வெண்ணெய் பிரானை

226
கருநீல கண்டர் கனல் வடிவு கொண்ட கயிலை செல்வர்
225
வெண் தலை ஏந்தி பலி கொள்ள விரும்பும் எம் பெருமான் ஒருபுறமும்
கள்ள செயல் கொண்டு அடியவர்கள் இல்லத்தில் வெண்ணை உண்ட மாயவன் மறுபுறமும்
நல் அருள் புரிய வேண்டி எம் இல்லத்தை நீ நாடி வந்து அமர்ந்து
நன்மை புரிவதும்
கள்ளமில்லா உம் திருவடி மேல் காதல் கொள்ள கருணை புரிந்ததும் கற்பகமே கண்மணியே ஆவுடையே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றி
போற்றியே 
224
நேசமுடன் நின் திருவடியை
காண விரைந்து அடைந்து
பாசமுடன் அம்மா தாயே என்று அன்புடன் யான் பகிர்ந்து
ஆசையுடன் எம்மை  மகனே அன்பனே என்று
வாஞ்சையுடன் வாராயோ கூறாயோ வள்ளலே ஆவுடையே கோமதியே  என் அம்மையே ஆச்சியே
நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)
223
கனவு காண்கிறேன் கண்மணி கோமதியே என்
கருத்தினில் நீ இருக்கின்றாய் கருணையோடு எம்மை
காத்து அருள்கின்றாய் கனிவுடன் எம்மை வழி நடத்துகின்றாய்
கனவுகள் நிறைவேற அருள் புரிவாய் என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
222
கதிர் உதித்த பின்பும் மலராத கமலம் உண்டோ கருணை நிறைந்த திருவடிகளை போற்றிய பின்பும்
அடியவர்களை காணாத தெய்வம் உண்டோ
கற்பகமே கருணை கடலே
ஆவுடையே  கோமதியே அருள்வாயே என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
221
மூடன் முக்தி நெறி அறியாதவன் பக்தி சாதனங்களை பயிலாதவன்
அறியாதவன்
எண் திசையிலும் நின் புகழுடைய திருத்தலங்களை மிதியாதவன்
அவலன்
என் செய்வேன் ஏது அறியாதவன்
நாயகியே நின்  மேல் பற்றில்லாதவனை
நாடி ஆட்கொள்வாயே நல்லருள் சக்தியே ஆவுடையே என் அம்மை ஆச்சியே  (ஜெய வீரபத்திரன்)
220
ஆனந்தமயி பரமானந்தமயி
பக்த ரக்ஷ் சிந்தாமணி
தேவ பூஜித ரூபினி திவ்யா அலங்ஙார ஸ்வருபின்ய்யை
மம ஹிருதய வாஸின்ய்யை மாங்கல்ய ரக்ஷ் தாரிண்ய்யை பாஹிமாம் பாஹிமாம் மாகாளி
தேஹிமே  பக்த ரக்ஷ் சிந்தாமணி
219
திருநாமம் ஓது திருவடிக்கு சேவை செய் ஆவுடை கோமதி திருவருளூக்கு பாத்திரமாகு என்று
உம் அருள் பெற்ற புகழ் மிகு அடியவர்களின் கூற்றின்படி
திருநாமத்தை ஒதுகிறேன் திருவடி சேவை செய்ய விரும்புகிறேன் திருவருளூக்கு பாத்திரமாக ஏங்குகிறேன்
திருவருள் புரிவாயே என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
218
சினமிகு காலனை உதைத்து
சீர் மிகு அடியவர் திருமுடியில் திருவடியை  வைத்து
கணங்கள் பூதகணங்களின் ஆடல் பாடலின் அழகை ரசித்து
ஆவுடையே அருள் என்று வேத கீதங்களை கொண்டு போற்றும் மாமுனிவர்களூக்கு
வேண்டிய வரம் அளித்து
காதலுடன் கரம் பிடித்த அய்யனுடன் கருணையுடன் எமக்கு அருள்வாய். இன்றும் என்றும்  என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
217
திருநாரையை போற்ற செய்து அதற்கு திருவருள் புரிந்த புன்னை வனத்தாயே கோமதியே
கல் மனம்  கொண்ட இவ் கடையேனை மேல் கருணகொண்டு நின்
திருவடி மேல் கசிந்து உருகும் மனம் அருள்வாயே மங்கள தாயே மாகாளியே
எண்ணிய யாவும் அடியவர்களூக்கு அருளூம் என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றி
(ஜெயவீரபத்திரன்)
216
விரித்து உரைத்திட்டாலும் விளங்கிடுமோ உம் திருவருள் பெருமை
படித்து அறிந்திட முடியமோ பராசக்தி நின் கருணையின் செயலை
உள்ளத்தில் ஒளி என நீ உறைவது அன்றி வேறு ஒன்றினால் அறியமுடியாது என் அம்மை ஆச்சியே உம் கருணையும் பெருமையும் நின் திருவடிகள் போற்றி
(ஜெய வீரபத்திரன்)
215
அளவுகோல் கொண்டு அளநதிடுதல் உண்டோ அடியவர்களின் அன்பை
உறவு நீ என்று உம் திருவடியை போற்றும் அடியவர்களிடம் அளவு கோல் கொள்வாயோ  ஆவுடையே
அரவு வெண்தலை  பிறையை அணிகலனாகசூடிய என் அம்மை கோமதியே 
இறைவி எம் தலைவி நீ என்று தொழும் எமக்கு அளவில்லாமல் அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
214
எஞ்சியிருக்கும் எம் வாழ்நாளும் தஞ்சை தாயே நின் திருவடியை போற்றும் படி அருள்வாயே
கொஞ்சும் தமிழலில் அடியவர்கள் தொழூம்
கோலமயிலே  கோமதியே
காலநாயகியே
வஞ்சி கொடியே நஞ்சு உண்ட  நாதனின் நாயகியே வள்ளலே அஞ்சேல் என்று அபயம் அளித்து அருள்வாயே  என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றி போற்றியே
(ஜெய வீரபத்திரன்)
213
காலனை காலால் உதைத்து கருணையுடன் பாலகனை காத்து
ஆலம் உண்ட நாதனுடன் அன்புடன் ஒர் உருக்கொண்டு
சிவபாலகனுக்கு அமுது அளித்து சிங்கார தமிழில் போற்ற செய்து
அலங்காரமாய் அய்யனுடன் எழுந்து அருளி மெய்யாய் என்னுள் வீற்று இருப்பாயே என் அம்மை ஆச்சியே உம் திருவடி போற்றி
(ஜெய வீரபத்திரன்)
212
அடியவர்களை அன்புடன் காத்து அருளூம்
211
பிறை சூடிய நாயகியே பிள்ளைகள் குறைகளை மன்னித்து  அருளூம் என் அன்னை கோமதியே
வாழையடி வாழையாக வம்சத்தை காத்து அருளூம் வாஞ்சி தாயே
காஞ்சி தலைவியே
கற்பக வல்லியே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றி
(S ஜெயவீரபத்திரன்)
210
தூணிலிம் இருப்பாய் சிறு துரும்புலிம் இருப்பாய்
209
மனதிலும் காதுகளிலும்  ஒரு நாமம் ஒலிக்கட்டும்
மங்கள தாயே என் அம்மை ஆச்சியே அது உன் திருநாமம் ஆக இருக்கட்டும்
செயல்படுவது உன் திருவடி சேவைக்கே என்று தொடரட்டும்
இடர்படுவதும் இல்லை என்று சொல்லும் மாறு வளமுடன் என்றும் என்  வாழ்வு  அமையட்டும் என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

208
பருவத்தை நம்பி குளத்தை வெட்டினால்
பருவம் பொய்த்து போனால்
பாவி என் செய்வேன்
நிலத்துள் நீரை குளத்து உள்
வரச் செய்ய நீ கருணை புரிந்தால்   பிறந்த  பயன் அடைவேன் ஆவுடையே என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)
207
காதலுடன் கழல் பணிய செய்தாய்
ஆதலால் எமக்கு அருள்வாயே
என் அம்மை கோமதியே
சோர்தலுடன் சுவை இழந்த வாழ்வுடன் வாழூம் எம்மை காப்பாயே
ஆறுதலுடன் அம்மை ஆச்சி இருக்கிறேன் அஞ்சாதே என்று
அருள் வாக்கு தருவாயே
பேணுதல் உம்  கடமை அன்றோ பெற்றவளே  திருமகளே நாடி அருள்வாயே  என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
206
ஆதி நீ அந்தம் நீ என்று பாதி பிறை அணிந்த பரமன் போற்றும்பராசக்தியே என் அம்மை ஆச்சியே
வியாதி நீங்க வேண்டி விடியல் இல்லா இரவு போல தொடரும் இடர் தீர
ஊர்தி ஏறி உமையவன் உடன் வந்து நாதியற்ற இவ் நல் அடியேனுக்கு நன்மை புரிவாயே
சோதி வடிவே  கிருபாகாரியே சங்கரியே கோமதியே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றி போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

205
கருணையற்ற தேவியின் கழல் பற்றினேனோ
கம்சனை படைத்த சக்தியிடம் காதல் கொண்டேனோ
கற்பகமே என்று போற்றும் அடியவர் வாழ்வில் கடுந்துயர் அளிப்பவளை கைதொழுதேனோ
மதி மயங்குகிறனே  மங்களம் அருள்வாயே மாகாளியே  என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)
204
நடவாத செயல் ஒன்று உண்டோ நானிலத்தின் அரசியே உம்மை
விடாது நின் திருவடியை தொழூம் அடியவர் வாழ்வில்
நடவாத செயல் ஒன்று உண்டோ
என் அம்மை கோமதியே
பிறவாத வரமும் என்றும் உம்மை தொழும் காலமும் அருள்வாய் என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)
203
எல்லையில்லா கருணையுடைய என்
அம்மை ஆச்சியே
தொல்லை இல்லா வாழ்வு அருள்வாயே தூயவளே
மாயவளே
பிள்ளைகள் பிழைகள் பொறுத்து அருளூம் பிஞ்சகன் தாயே
நல் வழி வேண்டுகின்றேன் அருள்வாயே கோமதியே என் அம்மை ஆச்சியே
  (ஜெயவீரபத்திரன்)
202
வரம் ஒன்று பெறுவேன் நல் வரம் ஒன்று பெறுவேன் உம்மிடம் வள்ளலே
201
வறிபேன் சிறியேன் யான் வாடூம் நிலை அறியாயோ வள்ளலே என் அம்மை ஆச்சியே
வள்ளலே வாஞ்சி செல்வரே காஞ்சி தலைவியே கற்பக கோமதியே
கருணையுடன் காத்து அருள்வாய் காழி செல்வமே ஆழி தலைவியே ஆதி சக்தியே
200
நேசமுடைய தாயே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றி
பாசமுடைய தாயே பராசக்தியே பத்ரகாளியே உம் திருவடிகள்
போற்றி
கருணை நிறைந்த புன்னை வன நாயிகியே அன்னை கோமதியே உம் திருவடிகள் போற்றி
மங்கள மாகாளியே மங்காத தங்கமே பிரத்தியங்கிரா தாயே என் அம்மை ஆச்சியே போற்றி
சங்கரி கோமதியே போற்றி  நாராயிணி கோமதியே  போற்றி    சங்கர நாராயிண்யே போற்றி
199
கமலம் அல்லி புகழ் மிகு துளசி எண்ணிய பலன் அருளூம் வன்னி வில்வம்
மணம் மிகுந்த மல்லி ஜாதி முல்லை கொடிமுல்லை நித்திய மல்லி செண்பகம் செவ்ரளி பவளமல்லி  நித்தம் பல பூக்கள் கொண்டு  நின் திருவடியை அன்புடன் போற்றும் அடியவர்களூக்கு புகழுடைய வாழ்வு அருளூம் என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றி
(ஜெயவீரபத்திரன்)
198
ஆசார கருணாதீதே ஆச்ச்ர்ய
கருணாமயே
ஆயுர் ஆரோக்கியம் இஷ்ட ஸித்திம் தேஹிமே ஸதா

ஏறிய விடம் இரங்கியதுஇனிய வாழ்வு தொடங்கியது  ஏழை அபலைப் பெண் துயர் நீங்கியது
பாடிய பிள்ளைக்கு பரிசு அளித்து
197
அச்சம் தவிர்  ஆண்மை கொள் இச்சை கொள் ஈஸ்வரி மேல் உமையவளே ஊரணியே எழில் அரசியே ஏகவல்லியே என்று ஐயமின்றி போற்று நம் அம்மை ஆச்சியின் திருவடிகளை என்றும்
(ஜெய வீரபத்திரன்)
196
அச்சம் அறியா அழகு மங்கை அஞ்சியது போல் ஆடல் புரிந்து அய்யனை மகிழ்வித்து கொஞ்சிய
எழில் மங்கை
195
நறுமண கூந்தலும் இருமணம கொண்டஅய்யனுடன் உடன உறைந்த
194
இழிசெயல்கள் நாளூம் பல  செய்து புகழை அடையும்  போக்கரிகள் போல
193
மாகாள நாயகி மங்களம் அருளூம் பூ கையிலாய தேவியே புன்னை வனத் அரசியே
ஏங்கும் காலம் போய் உமையவளே உம் திருவடியை போற்றும் காலம் அருளிய
கார்கால வண்ண கருகூந்தல் கொண்ட போர் கால நாயகியே
சீர்காழி தாயே சிவபுரத்து அம்மையே கோமதியே உம் திருவடி போற்றி என்  அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
192
ஏது நிறை எம் வாழ்வில் எல்லாமே குறை என்று உலகில்
வாடி நின் திருவடியை நாடி உம் திருவருள் வேண்டும் அன்பர்களூக்கு
ஏது குறை எல்லாமே நிறை எம் வாழ்வில் அம்மையே நின் அன்பினால் என்று
போற்றும் அன்பர்களின் பொன்மனச் செம்மலே என் அம்மை ஆச்சியே உம் திருவடிகள் போற்றி போற்றி
191
நாளூம் உம்மை தொழுவேன் அம்மையே ஆச்சியே
நன்மையை வேண்டி உம் திருவடியை பற்றிட்டேன் போற்றிடவேன்
பாழும் உலகில் பாவியேன் செய்த பாவம் தீர பகவதியே
பரம தயாபரியே கோமதியே காத்து அருள்வாய் இருகரம் குவித்து வேண்டுகிறேன் என் அம்மை ஆச்சியே
190
கடலில் தோன்றும் அலைகளை கண்க்கிடுதல் முடியும்
அம்மையே நின் கருணை செயல்களை இப் பிறவி முழுவதும் உரைத்திடல் முடியமோ ஆழி தலைவியே அழகிய கோமதியே மாசிலா அண்ணலின்
மனமகிழ் தேவியே
பாசமுடன் இவ் எளியேனுக்கு மனமகிழ   நல் வரம் பல அருள்வாயே  என் அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
189
எளிமையின் வடிவே இனிமையின் பொருளே
பெருமையின் சிகரமே
கருணையின் கடலே
அன்பின் எல்லையே அழகிய முல்லையே
அருள்வாய் இவ் பிள்ளைக்கே என்றும் என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
188
இருள் அகற்றும்  கதிரின் ஒளியைப் போல்
மருளை போக்கும்  மெய் ஞானத்தை போல்
பொருள் அகற்றும் மக்களின் வறுமையைப் போல  பொன் மகளே நின்
திருவளால் என் தீவினையை தீர்த்து அருள்வாயே கோமதியே என் அம்மை ஆச்சியே 
(ஜெய வீரபத்திரன்)
187
வசந்த காலத்தை உணர்த்தும் குயிலின் கீதத்தையும்
கார் காலத்தை  அறிவிக்கும் மயில்களின் நடனமும் உணர முடியும்
அம்மையே நீ அருளூம் காலத்தை எங்கனம் யான் அறிவேன்
அருள்வாய் இக்கணமே அடியேனுக்கு என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
186
பகல் கனவு பலிக்கட்டும் பாவம் எல்லாம் ஒழியட்டும்
இல்லறம் செழிக்க இனியவளே உன் துணை என்றும் இருக்கட்டும்
நல் அறம் வளர நாடு வீடும் செழிப்புடன் மலர
நாமகளே கோமகளே கோமதியே நல் வரம்  அருள்வாய் என்றும் என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)
185
எங்கும் நிறைந்த எம் பெருமான் ஈசனை எம் அய்யனை
எக்காலம் வாழூம் தேவனை முக்காலம் உணர்ந்த முதல்வனை எளியோர்களுக்கும் அருளூம் சீர்காழி செல்வனை
எந்தையே என்று மன மகிழ போற்றுவனே உய்வேனே
(ஜெய வீரபத்திரன்)
184
பழுது உள்ள படைப்பே ஆயினும் யான் உம்மை
தொழுது போற்றி கொணடிருக்கும் புண்ணியன் அல்லவோ
அமுது வழங்கி அண்ணலுக்கு புகழ் சேர்த்த அம்மையே
அடியேனுக்கு அருள்வாயே என்  அம்மை ஆச்சியே
(ஜெய வீரபத்திரன்)
183
நன்மையை வேண்டி நாளும் உம் திருவடி தொழுகின்றனே
உண்மையுடன் உள்அன்போடு உம் திருநாமத்தை போற்றுகின்றனே
பண்ணிய பாவம் என்னம்மா பதில் கூறு   பரம தயாபரியே பராசக்தியே
பாராமுகமாய் இருந்து எம்மை நாளூம்  வருத்துகிறாயே என் அம்மையே ஆச்சியே
( ஜெய வீரபத்திரன்)

            இன்று திருநாவுக்கரசர் 
              பெருமான்குருபூஜை
           திரு அப்பர் பெருமான்
                   திருவடி துதி
182
உண்டார் நஞ்சை உமையோர் பாகன் நாமத்தை சொல்லி
வென்றார் அமணர் வஞ்சத்தை உமாபதி கருணையினாலே
கொண்டார் புகழ் மாலை உமை நேசன் திருவருளினாலே
தந்தார் சீர்மிகு தேவாரம் அவர் திருவடி கழலே நமக்கு துணை
(ஜெய வீரபத்திரன்)
181
இரக்கம் கொள்வாய் எளியவன் மேல்  கருணையே வடிவான என் அன்னை கோமதியே
உறக்கம் இன்றி வாடும் மாந்தரைப் போல் உழல்கிறேன் ஊழ்வினையாலே  உமையவளே திருமகளே
தருக்கன் தலை அறுத்து அமரர்களை காத்த தக்ஷ்ண காளியே தயாபரியே
ஊழ்வினை ஒழித்து உன்னத வாழ்வை அருள்வாயே உபகாரியே  என் அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)

180
நீலமிடறு நிறத்தவள்  நித்தம் தொழும் அடியவர்களூக்கு நல் வரம் தருபவள்
மூவர் தேவர் போற்றும் பெருமை மிகு புண்ணிய திருவடி கொண்டவள்


179
திருவருள் நல்குவாய் தீவினை களைவாய் என்று அந்த திருநாளை ஏங்கி தவிக்க  திருவருள் நல்குமால் தீவினை களையாமல் மௌனமாக  இருக்கின்றயே 
திருவடி தொழும் அடியவர்கள் தீவினை களையாமல்  திருஅரங்கனோடு துயில் கொண்டு உள்ளாயோ என் அம்மை ஆச்சியே          
(ஜெய வீரபத்திரன்)
178
செங்கமல நாயகி நம் செய்(த)வினைகளை  போக்கும்  செயலட்சுமி  மங்கல நாயகி மந்திர ருபினி மாலினி மஞ்சரி  மக்களை காக்கும் மகேஸ்வரி மருவத்தூர் நாயகி
மஙகளம் அருள்வாய் மகாலட்சுமி எனும் அம்மை ஆச்சி நீ
(ஜெய வீரபத்திரன்)
177
கோளாறு பதிகம் அருளிய அய்யனை உளமாறு போற்றபவர்களூக்கு வாழ்க்கையில் நலமாக வாழ்வார் என்பது திருமறை வாக்கு (ஓம் திருஞானசம்பந்தர் பெருமான் திருவடிகள் போற்றி)
176
கறை மிடற்றான் கருணை வடிவம் தான் பிறை சூடிய எம்மான் பெண்ணும் ஒர் பாகத்தான்
வரை மேல் வாழும் சிவன் தான் வள்ளல் குணத்தான்
இறை எம் இறை என்று தொழும் அடியவர்களூக்கு அருளூம் பொன்மனத்தான்
அவர் திருவடிகள் போற்றுவது அன்றி வேறு வழி ஒன்று யான் காண்
(ஜெயவீரபத்திரன்)


175
எளியேன் ஏழையேன் என்றும் உம் திருவடி போற்றும் நின் அடியேன்
வறியேன் நின் திருவருள் இன்றி வாடும் சிறியேன்
உரைவேன் என்றும் உம் திரு
174
நெஞ்சம் எல்லாம் நீயே தாயே என் நெஞ்த்தில் நிறைந்து  இருக்கும் அம்மை ஆச்சியே
வஞ்சம் அறியா  வள்ளலே தஞ்சம் அடைந்தேன் தயாபரியே சங்கரியே
அஞ்ச செய்கின்ற இடர்களும் நஞ்சு போல பாதகமான  காலங்களும்
நலிவு அடைய செய்து நல் வாழ்வு அருள்வாயே என் அம்மை ஆச்சியே நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்)

173
ஊமையின் கனவை உரைக்க முடியும் அதை
உணர்த்தும் விதத்தில் பிறர் அறிய வைக்க  முடியும்
தாயே நான் தவிக்கின்ற தவிப்பு உன்னையினறி
வேறு யார் அறிய முடியும்
தண்ணருள் புரிவாய் இன்றும் என்றும்
என் அம்மை ஆச்சியே


172
தூக்கத்தில் வரும் கனவு தனை இங்கு யார் உரைப்பார்?
துயரக்கடலில் விழுந்த மனிதனை
இங்கு யார் கரை சேர்ப்பார் ?
கல்லுக்குள் வாழூம் தேரை நிலை யார் அறிவார்?
கால அரக்கன் எம்மை வதைப்பதை யார் தடுப்பார் ?
அம்மை ஆச்சியே நீ அறிவாயே
அபயம் அளித்து அருள்வாயே
(ஜெயவீரபத்திரன்)
171
அடியவரில் பெரியவர் அப்பர் பெருமான் அச்சம் போக்கிய கோளாறு பதிகம் அருளிய கோமகன் திருத்தாள் பணிவோம் நாளும் கோளாறு பதிகம் ஒதுவோம் நன்மைகள் பெறுவோம்
170
பாவியேன் பரமதயாபரியே என் அம்மை ஆச்சியே நின் திருவடியை  நாடினேன்  என்
ஆவியும் அகமும் ஆட்கொண்டு அருள்வாயே ஆதிசைவ சக்தியே
ஆதிபராசக்தியே
169
வெள்ளம் தாங்கும் சடையன் நல் உள்ளம் கொண்ட தேவன்
அல்லல் இல்லா நல் வாழ்வு  அருளூம் ஆவுடைத்துறை செல்வன்<
...

[Message clipped]  View entire message