https://www.facebook.com/watch/?v=617357435596620
நாராயணி கோமதி நாமம் உண்டு நாளும் போற்றிட ஷேமம் உண்டு (கோமதி தாசன்)
கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக
கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக
Tuesday, 13 January 2026
அருள்மிகு ஸ்ரீ ஆச்சி அம்மன் பூ மாலை தமிழ் பாமாலை ஆக்கம் அம்மை ஆச்சியின் அருளால் S ஜெய வீரபத்திரன் (அம்மை ஆச்சி நேசன் )
பூமாலை தமிழ் பாமாலை 1
வாட்டுகிறதே காலம் வள்ளலே அன்பே நீர்
அறியிரோ களையீரோ நாளூம்
இந்த காற்றடைத்த பை எத்தனை மனபாரம் தாங்கும்
அன்னையே அறியீரோ நீரும்
நாற்றம் நிறைந்த மாலைகளை வெறுத்து
நரமாலைகளை சூடிக் கொண்ட நீரும்
நல்அடியவர்களை நலிந்த அன்பர்களை மேல்
வெறுப்பு கொண்டீரோ நீரும்
இது தான் கலியுக விதியோ
கண்மணி ஆச்சியே களைவீரே நீரும்
ஏற்றம் வேண்டி இளைத்தேனே நாயேன் நாளும்
ஊட்டமருந்து அருளாமல்
இளைக்கும் மகனை காணும் அன்னை ஆனீரே நீரும்
இதுவும் அன்போ ஆவுடையே
கூறும்
Subscribe to:
Comments (Atom)