கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Sunday 13 March 2016

ஸ்ரீ மஹா கணபதி உபநிஷித்

 

ஹரி ஓம் கணபதி உனக்கு வணக்கம்.
நீயே உண்மையில் முடிவான உண்மை  நீ தான் எதையும் செய்பவன்.
நீ காப்பாற்றுபவன்.அழிப்பவனும் நீயே. நீயே யாவற்றையும் அடக்கும் அழிவற்ற பிரம்மம்.நீயே உணமையான சாஸ்வத.ஆத்மா.நான் உண்மையையே கூறுகிறேன் .நீ என்னைப் பாதுகாப்பாயாக  எனது குருவைக் காப்பாற்று. கேட்பவனகாய என்னைக் காப்பாற்று  
தானம் கொடுப்பவனைக்  காப்பாற்று..காப்பாற்றுபவனைக் காப்பாற்று.
.மௌனியான மாணவனைக் காப்பாற்று. என்னைப் பின்புறமிருந்து காப்பாற்று முன்புறமும் காப்பாற்று. இடதுபுறத்தில்  இருந்தும் ,. வலதுபுறத்தில் இருந்தும் காப்பாற்று..மேலிருந்தும் கீழிருந்தும் காப்பாற்று. எல்லாப் புறங்களிருந்தும் எல்லா விதங்களிலும்.
என்னைக் நீ காப்பாற்றுவாயாக..நீயே வாக்குக்கு அதிபதி  நீயே ஞானத்துக்கு இருப்பிடம் நீயே ஆனந்தமயம். நீயே பரமாத்ம ஸ்வருபம் நீயே இரண்டற்ற சச்சிதானந்த  பொருள்.. உண்மையில் நீயே  பிரம்மம்.. நீ எல்லாக் கலை ஞானங்களுக்கு  இருப்பிடம்.
இவ்வுலகு முழுவதும் உன்னாலேயே தாங்கப்படுகிறது .இவ்வுலகு முழுவதும் உன்னாலேயே ஐக்கியமாகி விடுகிறது  இவ்வுலகு முழுவதும் உன்னிலேயே அடங்கி, உன்னிடமிருந்தே தோன்றுகிறது. நீயே பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் நீ தான் வாக்கின் நான்கு பாதங்கள். மூலகுணங்களுக்கு அப்பாற்பட்டவன் மூக் காலங்களையும் கடந்தவன்.
நீ மூலாதாரா சக்ரத்தில் யாவர்க்கும் அஸ்திவாரமாய் எக்காலமும் உறைகிறாய்.மூன்று சக்திகளுக்கும் நீயே இருப்பிடம். யோகிகள் எப்போதும் உன்னையே தியானிக்கிறார்கள். நீயே  பிரம்மா நீயே  விஷ்ணு நீயே  ருத்ரன் நீயே  இந்திரன் நீயே அக்னி நீயே  வாயு நீயே சூரிய சந்திரர்கள் நீயே பிரம்மன் அது இது எல்லாம் நீயே ஆகிறாய் பூர்பவஸ்வரோம்
கணேச மந்தரம் முதலிய பிரணவத்தை உச்சரித்துப் பிறகு சகாரத்தையும்
மகாரத்தையும் உச்சரிக்க வேண்டும்.ஓம் கம் ககாரம் முதல் அகாரம்
மத்தி மகாரம் முடிவு புள்ளி கடைசி இவைகளைப் சேர்ப்பது ஒலி
சம்ஹிதயே சேர்க்கை இதுவே கணேசனைப் பற்றி சரணம்
கனகர் என்பவர் இந்த மந்தரத்திற்குரிய ரிஷி.நிக்.ருத் காயத்ரி இதன் சீர்
மகா கணபதி மந்தரத்திற்குரிய தேவதை
ஓம் கம் கணபதயே நம

இதை 108 முறை உச்சரிக்க வேண்டும் இதுவே மந்த்ரம் இதன் பொருள்  கணபதிக்கு வணக்கம் என்பது
நாம் ஏகதந்தனை அறிந்து அந்த வக்ர தந்தனை தியானிக்கிறோம்
அந்த தந்த கடவுள் நன்மை அளிப்பாராக.
எவன் ஏகதந்தனோ நான்கு கைகளோடு ஈட்டிப் பாசம் உடையவனாய்
பயத்தை நிவிர்த்திப்பவனோ,வரங்களை அருள்பவனோ ,சர்வாயுத பாணியாய் மூஷிகத்தின் மீதுமர்ந்து செவ்வண்ணணாய் பெருவயிறணாய்
அகன்ற காதுகளுடன் சிவந்த ஆடைதரித்து செஞ்சந்தனமும் செம்மலர்களும் பூண்டு பக்தர்களுக்கு அருள் கூர்பவனாய், ஒளிப்பிழம்பாய்
உலகங்களுக்கு எல்லாம் அழிவற்ற காரணணாய் படைக்கும் காலத்தில் பிரகிருதி புருஷனுக்கும் மேம்பட்டவனனாய
விளங்கும் அவனை அடங்கின மனதோடு சதா
தியானம் செய்பவன் யோகிகளுக்குள் யோகியாயும்  சிறந்த யோகி ஆவான்..விரடாபதிக்கு வணக்கம். மானிடர்களுக்கு எல்லாம் பிரபுவானனுக்கு வணக்கம். பூதாதிபவனுக்கு வணக்கம் .பெருவயிறனான ஏகதந்தனே உனக்கு வணக்கம்
.விக்னங்களை நாசம் செய்பவனே சிவனாரின் மகனே வரம் அருள்பவரில் முதல்வனே உனக்கு பின்னும்  பின்னும்
வணக்கம் வணக்கம்.
 
THAVATHIRU SRI
GOMATHI DASAN SWAMIGAL














Flag Counter

Followers