உ
அருள் மிகு ஆச்சி அம்மன் அருள்
ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் துணை
ஸ்ரீகோமதியம்மன் கோவில்
அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி.க நகர் காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை—600011
M+91 8939809978 9884437550 9884472729
இணைய தளம் http://gomathidasan.blogspot.in/
EMAIL.sri gomathiarul@gmail.com
*****************************************************
மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி
29 வது ஆண்டு. லட்ச ஆவர்த்திமூல மந்திர ஜபம்
ஹோமம் அழைப்பிதழ்
விராடபதிக்கு வணக்கம் .மானிடர்களுக்கு
எல்லாம் பிரபு ஆனவனுக்கு வணக்கம்
பூதாதிபவனுக்கு வணக்கம். பெருவயிறான
ஏகதந்தனே உனக்கு வணக்கம்
விக்கினங்களை நாசம் செய்பவனே
சிவனாரின் மகனே வரம் அருள்பவரில்
முதல்வனே உமக்கு பின்னும் பின்னும் வணக்கம்
(ஸ்ரீ மஹா கணபதி அதர்வண உபநிஷத் )
அருள்மிகு வளமிகு கணபதி போற்றி
வான் உலகம் மண் உலகம் வாழ மறை வாழ
பான்மை தரு செய்ய தமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்று விழி நால்வாய்
யானைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்.
என்று மேற்ச் சொன்ன பாடல் படி கணபதி
திருவருளினால் உலகம் உய்ய
நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ பிலவ வருஷம் மார்கழி மாதம் 8ந் தேதி ஆங்கிலம் 23-12-2021 வியாழக்கிழமை தேய் பிறை சதுர்த்தி திதி ஆயில்யம் நட்சத்திரம் சித்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் ஸ்ரீ மகாகணபதிக்கு 29 வது ,ஆண்டு லட்சஆவர்த்தி மூலமந்திர ஜபம் ஹோமம் நடைப்பெற உள்ளது.
மேற்கண்ட கணபதி ஹோமம் திரு தவத்திரு கோமதி தாச சுவாமிகளால் அவர்களால் தொடங்க பெற்று
இது 29வது ஆண்டு ஆகும் இதை கண்ணுறும் மெய் அன்பர்கள் உங்கள் மேலான உதவியும் உழைப்பையும் தந்து உடனிருந்து நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேறோம்
நிகழ்ச்சி நிரல்
23-12-2021 வியாழக்கிழமை முதல்
01-01-2022 சனிக்கிழமை வரை
(மார்கழி 8 முதல் மார்கழி 17 வரை )
23-12-2021 வியாழக்கிழமை மார்கழி 8
காலை 5.00 மணி அளவில் ஹேரம்ப கணபதி பூஜை
கலச ஸ்தாபனம் , கலச பூஜை
காலை 9.00 மணியளவில்
லட்ச ஆவர்த்தி கணபதி ஹோமம் ஆரம்பம்
காலை 11.00 மணியளவில் பூர்ணாஹுதி
மஹா தீபாரதனை பிரசாத விநியோகம்
பிரி தினம் 23-12-2021 முதல் 1-12-2022 வரை
காலை 8.00 மணி அளவில் கணபதி ஹோமம் ஆரம்பம்
பிரிதி தினம் 23-12-2021 முதல் 31-12-2021 வரை
மாலை 6.௦௦ மணிஅளவில்
லட்சார்ச்சனை நடைப்பெறும்
01-01-2022 சனிக்கிழமை காலை 8.00 மணி அளவில் மஹாகணபதி ஹோமம் ஆரம்பம்
காலை 10.30 மணி அளவில் பூர்ணாஹுதி விஷேஷ அபிஷேகம் அர்ச்சனை
மஹா தீபாராதனை பிரசாத வினியோகம்
பகல் 12.00 மணி அளவில் அன்னதானம்
கடந்த முறை ஹோமத்தில் பொருள் உதவியும் உழைப்பையும் தந்து உடனிருந்து நடத்தித் தந்த
கோமதி அடியவர்களுக்கு கணபதி அருளால்
நீண்ட ஆயுள் குறைவற்ற ஆரோக்கியம் வளரும் நிதி
புகழ் பெற்ற அடியவர்கள் போல் பக்தி வாழ்வியில் ஞானம் அற வழியில் வைராக்கியம் கணபதியின் திருவருளினால் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்
இப்படிக்கு என்றும் இறை பணியில்
B. ஜெயலட்சுமி பாலசுப்ரமணியன்
நிர்வாக டிரஸ்டி
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)
சென்னை-600011
வேள்வி கட்டணம் ருபாய்- 350.00 ரூபாய்
FOR DONATIONS PLEASE SEND TO
SRI SANKARA NARAYANAR TRUST (REG)
PUNJAB NATIONAL BANK
A\C NO 1587 000 1000 33284 IFSC CODE PUNB 0158700
T.V.K NAGAR BRANCH CHENNAI-600011
DEAR DEVOTTES IF YOU SEND MONEY
ON LINE TRANSFER OR MONEY ORDER, CHEQUE
PLEASE MENTION YOUR MOBILE NO
AND MAIL ID WITH ADDRESS AND SEND SMS
TO +918939809978
KOVIL WHATSAPP NO 918939809978
கீழ் கண்ட திரவியங்கள் கொண்டு
ஹோமம் நடைப்பெற உள்ளது
1 அவல் 2-நெல்பொரி 3 -ஒடச்சக்கடலை 4- நாட்டுச்சக்கரை
5 நெய் 6 தேன் 7-அருகம்புல் 8- கரும்பு துண்டு 9-மோதகம்
10-அப்பம் 11-கொப்பரை தேங்காய் 12- விளாம்பழம்
13-வில்வ பழம் -14- மாதுளைப்பழம் 15-வலம்புரி
16-இடம்புரி -17-அரச சமித்து 18- வன்னி சமித்து
19-சத்துமாவு 20-எள் உருண்டை -21-கற்கண்டு
22-முந்திரி -23 திராட்சை -24-தாமரை -25-வில்வம்
26-வன்னி இலை -27-மகிழும் பூ 28-வெண் தாமரை
29-நவகிரஹ சமித்து 30-செவ்வாழை 31-ருத்ர ஜடை
32-தாமரை மணி 33-கஸ்தூரி மஞ்சள் 34-ஹவிஸ்
35-வெண்கடுகு 36-வெள்ளை எள்
ஹோம சமித்து பலன்கள்
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலக்ஷ்மி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரச குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல், பில்லி சூனியம் அகலும்.
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகள் கல்வியும் ஞானமும் பெறுவர்.
வில்வக் குச்சி : செல்வம் சேரும் அருகம்புல் : விஷபயம் நீங்கும். ஆலங் குச்சி : புகழைச் சேர்க்கும் .
நொச்சி : காரியத்தடை விலகும்.
(பின் குறிப்பு )
நிர்வாக வசதிக்காக நிகழ்ச்சிகள் மாறுதலுக்கு உட்பட்டவை
அருள் மிகு ஆச்சி அம்மன் பாமாலை
பொல்லாப் பிணியும் கடனும் தீர்ந்துதது
தாயே உன் கருணையினால்
பொன் பொருள் புகழ் அருள் கிடைத்தது
தாயே உன் அருளினால்
கல்வி கலைகளில் தேர்ச்சி வெற்றி பக்தி ஸித்தி யோகம் வந்தது தாயே உன் தயவினால்
எங்கள் குலம் தழைக்கிறது என்றும் காக்கும்
எங்கள் அம்மை ஆச்சியே
உந்தன் அனபினால்
(S .ஜெய வீரபத்திரன் )