கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Wednesday, 28 October 2015

கும்பாபிஷேக திருப்பணி நிதி உதவி வேண்டுகோள்


ஸ்ரீ கோமதி  அம்மன் துணை.


SRIGOMATHI SANKARA NARAYANAR DEVASTHANAM 
(SRI SANKARA NARAYANAR TRUST REGD)
                                              SRI GOMATHI AMMAN KOVIL

                      NO-19/ 25 PRAKASAM ST.T.V.K NAGAR PERAMBUR 
                                                   CHENNAI-600011
M-9884437550- 9884472729- 8939809978
                                    EMAIL ID srigomathiarul@gmail.com 
website- http://gomathidasan.blogspot.in http://srigomathiammantemple.hpage.com
**************************************************************

கும்பாபிஷேக திருப்பணி நிதி உதவி வேண்டுகோள்

அன்புடையீர்,

வட சங்கரன்கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படும்அருள்மிகு ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் ஸ்ரீ சங்கர நாராயணர் சமேத ஸ்ரீ கோமதி அம்மன் அருள் பாலிக்கும் திருத்தலம் சென்னை மாநகரில் பெரம்பூர் என்னும் பகுதியில் அருகில் அமைந்துள்ள திரு.விக நகர் என்ற இடத்தில் மிக பிரசித்தமாக அமைந்திருக்கிறது.

தவத்திரு கோமதிதாசன் என்று அனைத்து பக்தர்களாலும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ஸ்ரீ கே.வி பாலசுப்ரமணியன் அவர்களால் சுமார் நாற்பது  வருடங்களுக்கு முன், ஸ்ரீ கோமதி அம்பாளின் உத்தரவுப்படி நிறுவப்பட்ட இந்த சிறப்புமிக்க ஆலயம் அவரது காலத்திற்கு பின்னும் அவரது மனைவி ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி  அம்மாள் மற்றும் குடும்பத்தாரால் நன்றாக பராமரிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதி லக்ஷகணபதி ஹோமம், ஆடித்தவசு உற்சவம், நவராத்திரி உற்சவம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் பல விழாக்களும் நித்ய பூஜைகளும் மிக சிறப்பாக நடந்து கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததே .

 இவ்வாலயம்  முதலில் மிகவும் சிறியதாக நிர்மாணிக்கப்பட்டு ஸ்ரீ   கோமதிதாசன் அவர்களின் பூரண பக்தியாலும் அயராத உழைப்பினாலும் ஸ்ரீ கோமதி அம்பாளின் பக்த மகாஜனங்களின் நிதி உதவியாலும் படிப்படியாக வளர்ந்து முதல் கும்பாபிஷேகம் 1980 இலும் இரண்டாவது கும்பாபிஷேகம் 1990 இலும்  மூன்றாவது கும்பாபிஷேகம் 2003 ஆண்டிலும் நடைபெற்றது. ஆலயத்தில் பிரதான சந்நிதிகளைத்தவிர கோஷ்ட தேவதைகள், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர், ஆஞ்சநேயர், பைரவர், நவக்ரகம், ஏகவல்லி தாயார்,  ஆஞ்சநேயர், பைரவர், நவக்ரகம்ஏகவல்லி தாயார்,  மற்றும் ஸ்ரீ ஐயப்பன் சந்நிதிகளும் வெவ்வேறு சமயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன

ஸ்ரீகோமதியம்மன்திருஉருவ சிலை சிற்பகலாநிதி திருகௌரிசங்கர் ஸ்தபதி அவர்களால் வடிக்க பட்ட மிகவும் அரிதான த்ரிகோண சிலாவிக்ரஹம்  எனபது குறிப்படதக்கது.

இப்பொழுது பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எல்லா பிரதான  சந்நிதிகளையும் விரிவாக்கம் செய்து மற்ற எல்லா சந்நிதிகளையும் முறைப்படுத்தி உற்சவங்கள் விரிவாக நடத்த எதுவாக மண்டபங்களையும் பெரிதுபடுத்தி இந்த சிறப்புமிக்க ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்ய ஸ்ரீ கோமதிம்பாளின் அருளுத்தரவுடனும் ஸ்ரீ கோமதிதாசனவர்களின் ஆசியுடனும் ஏற்பாடு ஆகி வேலைகளெல்லாம் முழுமூச்சுடன் தொடங்கியாகி விட்டது

இந்த  திருப்பணிக்கு கும்பாபிஷேக சிலவு உட்பட சுமார் ரூபாய் 45 லட்சம் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் ஸ்ரீ சங்கர நாராயணர்  ஸ்ரீ கோமதி அம்மன் தனித் சன்னிதானங்களும் மற்றும்  விநாயகர் முருகர் நரசிம்மர் தாயார் சக்ரத்ஆழ்வார்ஆஞ்சனேயர் நவக்கிரகம் ஆச்சிஅம்மன் ஐயப்பன் காலபைரவர்  நர்த்தனகணபதி சர்ப்பகணபதி நாககன்னிகை சிவநாகமூர்த்தி விஷ்ணுநாகமூர்த்தி அரசமரத்து கணபதி மோதக கணபதி தக்ஷிணாமூர்த்தி விஷ்ணுமுர்த்தி பிரம்மா துர்க்கை சண்டிகேஸ்வரர் வள்ளி தெய்வயானை உடன்உறை ஆறுமுக சுவாமி மற்றும் கருடாழ்வார் நந்திகேஸ்வரர் மற்றும் சன்னிதானங்களும் புனரைமப்பு செய்ய உள்ளனபுதியதாக (sump) நீர்தொட்டி கட்டுதல் (12,000 liters capacity) மற்றும் புதியதாக இரண்டு தள (2 floors)மண்டபம் கட்டுவதும்  இத்திருப்பணியில் அடங்கும் .


ஸ்ரீ  கோமதி அம்மனின் பெருமையை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் வர்ணிக்கும் பொழுது   "நாம் செய்யும் பாவங்கள் என்கிற காட்டை  ,காட்டுத்தீ போன்று அழித்து,தன்னை அண்டியவர்களுக்கு தானே பக்தியை அளித்து  (பக்தனாக்கி), பக்தர்களுக்கெல்லாம் பாக்யத்தை அளித்து அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்துக்கள் என்கிற மலைகளை தவிடுபொடி ஆக்கி ப்ரத்யக்ஷ மூர்த்தியாக விளங்கும் அம்பிகை என்று வணங்குகிறார். "கொடுக்கின்ற தெய்வம் உன்போல் உண்டோ கோமதித்தாய் ஈச்வரியேஎன்று   ஸ்ரீ கோமதிதாசன் அவர்கள் மனமுருகி நாமேல்லோருக்க்காகவும் பிரார்த்தனை செய்வது இன்றும் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. அன்னை ஸ்ரீ கோமதி நாமேல்லோரையும் தனது குழந்தையாக ரக்ஷிக்கிறாள். அந்த தாய்க்கு நாமெல்லோரும் நமது கடமையை செய்து அருள் பெற இதுவே தக்க தருணம் .

 இந்த  மகத்தான திருப்பணியில் ஆன்மீக அன்பர்கள் அனைவரும்  பங்குகொண்டு தங்களால் இயன்ற பொருள் உதவி, நிதி உதவி  அளித்து அன்னை ஸ்ரீகோமதிஅம்மன் அருளுக்கு பாத்திரமகுமாறு வேண்டிக்கொள்கிறோம். தனி சன்னிதானம் உபயம் மற்றும் தனி மூர்த்தி பிரதிஷ்டை ஏற்க விருப்பம் உள்ளவர்கள் மிகவும் பாக்யசாலிகள் .

நன்கொடை அளிப்பவர்களுக்கு விசேஷ அர்ச்சனை ஆராதனைகள் செய்து பிரசாதங்கள் அளிக்கப்படும். கும்பாபிஷேக மலரில் நன்கொடையாளர்களின் பெயர் மற்றும் சேவைகளை  நினைவுகூர்ந்து கௌரவிக்கப்படும் . எல்லா விவரம்களுக்கும் ஆலய நிர்வாகத்திடம் அணுகவும்.

என்றும்இறைப்பணயில்
திருமதி ஜெயலக்ஷ்மி கோமதிதாசன்
Managing Trustee Sri Sankara Narayanar Trust (regd) Chennai




கோவில் நிர்மான வரைபடம்
அருள்மிகு ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் சன்னதி
அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மன்சன்னதி
அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர் சன்னதி  


நன்கொடை அளிக்க விரும்புவோர்
FOR DONATIONS PLEASE SEND TO
SRI SANKARA NARAYANAR TRUST (REG)
PUNJAB NATIONAL BANK
T.V.K NAGAR BRANCH  CH-600011
IFSC CODE -       PUNB 0158700
A/C NO-              1587-000-1000-33284
***********************************************
SRI SANKARA NARAYANAR TRUST (REG)
TAMIL NADU MERCANTILE BANK
PERAMBUR BRANCH
A/C NO-1571-0005-030-1239
IFSC CODE- TMBL 00001137
************************************************
DEAR DEVOTTESS IF U SEND AMOUNT THRU ON LINE PLEASE
SEND UR DETAILS TO MAIL OR SMS
DEAR DEVOTTESS IF U SEND AMOUNT THRU  MONEY ORDER
PLEASE MENTION UR MOBILE NO  OR LAND LINE NO
For any information please call us 8939809978
 Morning 10.00 am to   evening 6.00 pm



No comments:

Post a Comment

Flag Counter

Followers