கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Tuesday, 20 August 2019

பூக்கள் தரும் பலன்கள்


                             உ 

                   ஸ்ரீ ஆச்சி அம்மன் அருள் 

                 கீழ்க்கண்டபூக்கள்   
   ஸ்ரீ கோமதி அம்மனுக்கு  சமர்ப்பிபது நலம் தரும்
*******************************************************************
                                      1-
வில்வ மாலை-        சிவன்  அருள்  -   
                                   2-
துளசி  மாலை-      விஷ்ணு  அருள் -
                                     3-
வேர்க்கடலை பருப்பு   மாலை- ஆயுள் விருத்தி
                                         4-
நாகலிங்க பூ மாலை .சர்ப்பதோஷ  நிவர்த்தி
                                          5-
எருக்கம் பூ மாலை - பித்ரு தோஷ  நிவர்த்தி
   (சிவ பெருமான்  அல்லது  கால பைரவருக்கு  சாற்ற  வேண்டும்)
                            6-
தவனம் பூ மாலை-சரீர  நோய்  நிவர்த்தி
                             7-
செண்பக பூ மாலை- வம்ச விருத்தி
                           8-
மகிழம் பூ மாலை-மனசாந்தி
                              9-
சங்கு பூ  மாலை -சனிதோஷ  நிவர்த்தி
                                10-
செவ்வரளி பூ  மாலை- பய நிவர்த்தி
  
                                                      11  
மஞ்சள் கிழங்கு மாலை -கல்யாண பிராப்தி  செவ்வாய்க்கிழமை சுக்ர ஹோரை 
காலை 8.00 9.00 மாலை 8.00-9.00 குரு ஹோரை
வியாழக்கிழமை  காலை சுக்ரஓரை  9.00 மணி 10.00 (வெள்ளிக்கிழமை  குரு ஓரை       காலை-10  மணி முதல்  11.00 வரை  மாலை    5.00 மணி முதல் 6.00 மணி வரை ) 

                                                                     14
-செவ்வாய் மற்றும் வியாழன் அன்று  சுக்ர ஹோரையில் நாகலிங்க பூ மற்றும் முல்லை பூவை     சாற்றி பால்
அல்லது தேனில் கலந்த  நெல்லிக்காயை 
நைவேத்தியம்  செய்து விநியோகம்  செய்த வர  
  புத்ர  பிராப்தி  மற்றும் வம்ச விருத்தி

                                15 
வில்வ இலையுடன்  முல்லை பூ சேர்த்து  வெள்ளிக்கிழமையில்  அன்று  வழிபட்டு  
சௌபாக்கிய த்ரிவியம் தானம் செயதால் 
தம்பதி ஓற்றுமை மகழ்ச்சிகரமான வாழ்வு

                      16 
  அமாவாசை  அன்று  உப்பு இல்லாத  வடை
 நைவேத்தியம் செய்து பக்ஷிகளுக்கு அளிக்க
   பாலாரிஷ்ட  தோஷ  நிவர்த்தி

17-
ரேவதி மற்றும் அனுஷம்  நட்சத்திரம்  அன்று 
புத குரு  சுக்ர ஹோரையில்  தவனம்  மற்றும் 
மரு வாசனை பூக்கள்    கொண்டு அம்பாளை 
வழிபட வித்யா பிராப்தி வாக்கு  ஸித்தி

                                 18-
பரணி மற்றும் அஷ்டமி  அன்று எலுமிச்சை பழ  மாலை வெத்தலை மாலை நாகலிங்க பூ மாலை மற்றும் 
செவ்வரளி  மாலை  சாற்றி வில்வம் தும்பை 
எருக்கம் கொண்டு அர்ச்சனை  செய்து  
இனிப்பு  பண்டங்கள்  நைவேத்யம் செய்து 
விநியோகம் செய்து வர சத்ரு நிவர்த்தி   
சர்வ காரிய  ஜயம்
                                                        19-
சங்கு பூவுடன்  செவ்வரளி  மற்றும் வன்னி பூ 
மாலை கட்டி அனுஷம்  அன்று     சாற்றி 
வழிபட்டால்    கிரஹ  தோஷ  நிவர்த்தி      
                                                   20
வன்னி மற்றும்  நீல சங்கு பூவை  சனிக்கிழமை  
அன்று குரு ஓரையில்   அம்பாளுக்கு  சாற்றி
வழிபட்டால் சனி மற்றும் மாந்தி   தோஷ   நிவர்த்தி
          கா-7.00 -8.00 மா-7.00 -8.00

                                                       21  
பௌர்ணமி  அன்று மாலை  அல்லி ,வாசனை பூக்கள்  
சாற்றி பஞ்சாமிர்தம் அல்லது இனிப்பு  நைவேத்யம்
 செய்து வழிபட்டால் சர்வ ஐஸ்வரியம்  ஏற்படும்    

மல்லி பூக்களால்  ஸ்ரீ கோமதி அம்மனுக்கு அர்ச்சனை செய்து
அந்த பூக்களுடன்  பணத்தை  வைத்தால் செல்வம் 
தங்கும்  வளரும்   

      மஹா  பாரதத்தில்  அன்னை கோமதி
அன்னை கோமதியே ! மலர் ஈந்த அன்னையே மலர் கொடு,’ என்று வேண்ட மலர் கொட்டும். அதனை எடுத்து கோமதி தாய்க்கு அர்ச்சித்து, துரியோதனா என்று அழைக்க துரியோதனன் அங்கு பொக்கிஷப் பெட்டியை தயாராக வைத்திருப்பான். அதில் அந்த மல்லிகைப் பூவை வைத்து மூடி விடுவாள் காந்தாரி தேவி. இது தினமும் நடந்தது. அந்த பொக்கிஷத்தை உபயோகப்படுத்துவதனால் துரியோதனின் கையில் தனரேகையை நிஜப்படுத்தியது மல்லிகைப் பூ. கஜானாவில் மல்லிகைப்பூ வைத்தால் பொக்கிஷம் பொங்கி வளரும். அவர்கள் கையால் எந்த பொக்கிஷத்தை எடுத்தாலும் பொக்கிஷம் குறையவே குறையாது. எனவே அந்த தன ரேகை நிஜப்படுத்தப்பட்டுள்ள துரியோதனன் எதை வாரிக் கொடுத்தாலும் பொக்கிஷம் குறையாது,’ என்றான் சகாதேவன். அனைவரும் இதை ஆமோதித்தார்கள்

                                    நன்றி ஸ்ரீ அகஸ்திய  விஜயம்
மேற்படிவாக்கு  திருக்கயிலாயப் பொதிய
முனிப் பரம்பரை 1001வது குரு
மஹா சன்னிதானம் சக்தி
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள
கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ
சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய
ஸ்ரீலஸ்ரீ   ஸ்ரீ  சத்குரு வெங்கடராம சுவாமிகள் அவர்கள்



(நம்பிக்கையுடன்  பக்தியுடன்   தர்ம சிந்தனையுடன்  ஒரு  மண்டலம் வழிபட்டால் மேற்கண்ட  பலன்கள்  ஸித்தி  தரும்)

No comments:

Post a Comment

Flag Counter

Followers