கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Tuesday, 23 September 2014

ஆச்சி அம்மன் பாமாலை


                                                                                                                  
                                ஆக்கம் s. ஜெயவீரபத்ரன் 
                                 விநாயகர் வணக்கம்
  எடுக்கும் செயல்கள் அனைத்தும்  வெற்றி  பெற
 தடுக்கும் நம் தீவினை அகன்று மறைந்திட
  பக்தியுடன் இரு கரம்  கூப்பி -கணபதி
  என்னும் நாமம் ஓதுவோம்
  
ஆச்சி அம்மன் பாமாலை

1
 வாடினேன்  வருந்தினேன் வாழ் நாள் எல்லாம்
  தேடினேன் நின் திரு அருள் பெற  காலம் எல்லாம்
   நாடினேன் நின் திருவடியை நல் வாழ்வு பெற
   நல் அருள் புரிந்து காப்பாய் என் அம்மையே ஆச்சியே 

 நிலை இல்லா வாழ்வின் மேல் நேசம் வைத்து
  நின் திருவடி மறந்தேன் பார் -மறை புகழும்
  அன்னையே இந்த மாந்தனை கடைத்தேற
  கருணை உடன் காப்பாய் என் அம்மையே ஆச்சியே   


3

 உன் அருள் இன்றி ஒரு செயல் நடவாது
 என்று  உணராத வருக்கு  -  உன்
 செயலே எல்லாம் என்று உணர்ந்து - பின்பு
 வாழ்வில் துன்பம் இல்லை இன்பம் தான் 



 குறையில்லா மாமணியே கோகுலத்தின் நாயகியே   
   மறை புகழும் நாயகியே என் மரகதமே
 இணை இல்லா உன் திருவடி சரண அடைந்தேன்
 பரிவுடன் என்னை காப்பாய் ஆச்சியே என் அம்மையே

5 
  தீராத தீ வினை  உண்டோ அம்மா -நின்
 திருவடி சரண் அடைந்த பின்பு -
பாராது இருப்பது
  நின்கருணைக்கு   அழகு ஆகுமோ
மாறாத அன்புடன் காப்பாய்
   என்     அம்மையே ஆச்சியே

 அறம் வழியில் பொருள் சேர்த்தவர் காண்பது அரிது
  மறை சொன்ன வழியில் வா
ழ்ந்தவர்  காண்பது அரிது
  குறை இல்லா உயிரனம் காண்பது அரிது -உன்
  அருள் இன்றி உன்னை அடைந்தவர்  ஏது?


7
நாடிய பொருள்  கை கூடும் நல் வளங்கள் பெருகும்
  தேடும் செல்வங்கள் திசை எங்கும் வந்து சேரும்
  நாடும் வீடும்  நலம் பெற நாடுவோம்
  என்  அம்மை ஆச்சியின் திரு பாதங்களை 


8
 விதியை வெல்லும் வழி உண்டே கேளீர் -
 கோமதி  என்னும் என் அன்னையின் திரு நாமத்தை
 நம் மதியினில் ஏற்றி  தினமும் போற்றிட
 விதியை  வெல்வீர்  பாரீர்


  அருளும் பொருளும் அனைத்து அருளும்
   துன்ப இருள் தொலைந்து  மறையும்
  தூயவள் என் அன்னை கோமதி
  திருப் பாதம் பற்றிடும் அன்பருக்கு


10 

  நஞ்சு உண்ட நாயகனை காத்த நாயகியே -இந்த
  
பிஞ்சு மனம் படும் வேதனை அறியாயோ
  
தஞ்சம் என்று அடைந்த பின்பு -தாயே
 
தய புரிய தாமதம் ஏனோ என் அம்மையே ஆச்சியே


11 

 இருளும் ஒளியும் போல் என் வாழ்வில்
துன்பமும் துயரமும் சேர்ந்தே உள்ளது
தாயே நின் அருள் ஒளியால் என் துன்ப இருள்
தொலைய அருள் புரிவாயே என் அம்மையே ஆச்சியே

12 
 கல்லினில் இருக்கும் தேரைக்கு அருள் புரியம் தேவியே
கற்பகமே காளியே மாரியே என் கண்கண்ட தெய்வமே 
என்னையும் கருணையுடன் காப்பாய் அம்மையே
உலகாளும் உமையே என் அம்மை ஆச்சியே

13  
அறியாமையாலும் அகந்தையாலும் நின்திருவடி
 அனுதினம் துதிக்க மறந்து அல்லலுற்றேன் ஆதி சக்தியே 
அருள் கூர்ந்து இந்த அடியவனை காத்து அருள்வாய் 
 ஆதி லக்ஷ்மியே என் அம்மைஆச்சியே

14 
  மஞ்சள் நிறத்தவள் மங்களம் நிறைந்தவள்
கொஞ்சும் கிளி மொழிபேச்சினில் பக்தர்கள்
அஞ்சும் துயர் துடைப்பவள் தூயவள்
என் அம்மை அவள் ஆச்சி அம்மை அவள்

15 
உள்ளத்தாலும் உடலாலும் சோர்ந்து-மெலிந்தேன்


 தாயே உன் திருவடி சரண் அடைந்தேன் –எனக்கு


உன்னை அன்றி உலகில் யார் அருள்வார்


உமையவளே அம்மையே என் ஆச்சியே

16 
மாயவன் தங்கையே மங்கள ரூபனியே-இந்த

 சேயனை காக்க திரு உள்ளம் இல்லையோ


நாயேன் என்னை காக்க உன்னை இன்றி


உலகில் யார் உள்ளார் என் அம்மையே ஆச்சியே


17 

ஒருகை கொண்டு அருளினாலே ஓர்ஆயிரம் பிறவிக்கு போதும் ஆயிரம் கை கொண்டு அருளிய என் அன்னையே-
உன் அளப்பரிய கருணையை கூற ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனாலும் கூற  முடியாது என் அம்மையே ஆச்சியே

18 
குடையான நாகமும் குளிர் நிலவான திருமுகமும்
கடல்போன்ற பரந்த கருணை மனமும் -பக்தர்கள் விரும்பும் 
வரம் அருளும் திருக் கரமும்  மலரான  திருப் பாதமும்
 உடைய என் அம்மை ஆச்சியே நின் திருவடி சரணம்

19 

தீது இல்லா நாயகியே திருவளர் செல்வியே திருமகளே
என்னை வருத்தும் தீ வினை போக்க திருஉள்ளம் இல்லையோ
நின்னை தடுப்பவர் உண்டோ ? வள்ளல் நாயகியே
 அன்னையே கருணை புரிவாய் என் அம்மை ஆச்சியே

20 

கருவில் உருவான நாள் முதல் காலனிடம் செல்லும் நாள் வரை
காத்து அருளிய என் அன்னையே கற்பகமே காளியே 

காலனிடம் சென்ற பின்பும் கவலையில்லை-என்னை  
காத்து அருளும் அன்னை நீ இருக்க பயம் இல்லை என்அம்மை ஆச்சியே 
21 
கார் இருளைப் போக்கும் கதிரவனைப் போல -என்
நெஞ்சில் உள்ள மாயஇருளைப்   போக்கிய மங்கள சண்டியே  

சேயனக்கு திருவருள் நல்கி தீ வினையை போக்கிய திரு மகளே திருபுரசுந்தரியே என் அம்மையே ஆச்சி அம்மையே
22 
நலமும் வளங்கள் வேண்டி  நாடி வந்தேன்- நின் திருவடியை
நாடி வந்தவருக்கு நல் அருள் புரியம் நாயகியே
நாராயணியே நான்முகியே நற்தமிழ் நாயகியே
நல் அருள் புரிந்தாயே என் அம்மையே ஆச்சியே

23 

ஊழித் தீயை அணைக்க வல்லாரும் உள்ளாரோ ?
உமையவளே நீ அருள்வதில் பேதம் உண்டோ ?
உன் அருளைப் பெற வந்தேன் அருள்வாயே உத்தமியே
உலகுஆளும் என் அம்மையே ஆச்சி  அம்மையே
24 

தன் மகனை பிறர்வருத்தும் காணும் 
தாயும் உண்டோ தரணியில் ?
பொங்கிஎழு மாகாளி தக்கன் யாகம் 
வதம் செயதது போல்
போக்கிடு வாட்டிடும் என் தீவினைகளை
 நின் கோப பார்வையில்
பூட்டிடு என்னை நின் திருக் கரத்துக்குள் 
காத்திடு என்றும் என் அம்மை ஆச்சியே 
25 

பொல்லாப் பிணி கடன் தீர்ந்தது தாயே 
உன் கருணையால் பொன் பொருள் புகழ் 
அருள் கிடைத்தது உன் அருளினால் 
கல்வி கலைகளில்தேர்ச்சி,பக்தி சித்தி யோகம்,  
ஞானம்  வந்தது  உன் தயவினால்- 
எங்கள் குலம் தழைக்கிறது - 
என்று எங்களை காக்கும் 
 என் அம்மை ஆச்சி  உன் அன்பினால்
 

26 

பள்ளத்தை நோக்கி செல்லும் வெள்ளத்தை போல்-நின்
பாதகமலத்தை பற்றிடும் மனத்தை தா 
  பகலவனை விழியாக கொண்டவளே பகவதியே
  பத்ரகாளியே பவதாரணியே என் அம்மை ஆச்சியே

27 

செங்ககமலநாயகி நம்செய்(த) வினைகளைபோக்கும் ஜெயலட்சுமி
மங்கலநாயகி மந்திர ரூபனி மாலனி மஞ்சரி மக்களை காக்கும் மகேஸ்வரி மருவத்தூர் நாயகி மங்கலம் அருள்வாய் 

மகாலட்சுமி என் அம்மை ஆச்சியே

2

மாதுளம் பூ நிறக்காரி மங்கலம் அருளும் மாகாளி

சேயனை ஆட்கொண்ட செவ்இதழ் பூக்காரி

மாயங்கள் புரியும் ஈசனின் மன மகிழ் நாயகி

மாசுஇல்லாவாழ்வு அருள்வாய்மாகாளி என் அம்மை ஆச்சியே 
*
29 
தாயே தன் மகனை வெறுக்கும் இழி நிலைக்கு ஆளானேன் –இனி
தரணியில் செல்வது எங்கே தயை கூர்ந்து அருள்வாய்
தன்நிகர் இல்லா தாயே தக்ஷின காளியே

தரணிபோற்றும் தாயே என் அம்மை ஆச்சியே
30
நாரணர்  நெஞ்சிலும் நான்முகர் நாவிலும்
ஈசனார் இடபக்கத்திலும் அமர்ந்துஉள்ள என் அன்னையே
ஏழையேன்என் நெஞ்சிலும் அமர்ந்து இன்னல்களை களைவாய்
இன்னிசை நாயகியே என் அம்மை ஆச்சியே


31 
வாராய் அன்னை வந்து என் துயர் திராய் 
பாராய் என்றும் என்னை கருணை உடன் பாராய்
தாராய் நின் அருள் என்னும் அமுது தாராய்

கூறாய் என் துணை என்றும் உனக்கு என் அம்மை ஆச்சியே

32 
திங்களை சூடி தீவினை போக்கும்  திரு மகளே
  மங்கலம் அருளி மக்களை காக்கும் மலைமகளே
கலைகளை அருளி கருணை புரியும் கலைமகளே
என்றும் எங்களை காக்கும் நிலமகளே என் அம்மைஆச்சியே

33 
பிறைசூடிய நாயகனுக்கு பிச்சை அளித்து
பிணி நிக்கிய என் அன்னை அன்னபூரணியே-இந்த
பிள்ளையின் பிணி நீக்க திரு உள்ளம் இல்லையோ
     பிழைகளை மன்னித்து அருள்வாய் ஏகவல்லியே என் அம்மை ஆச்சியே

34 
நல்புத்தியும் இல்லை உன் மேல் உறுதியான பக்தி இல்லை
உன்னை அடையும் சித்தியும் எனக்கு தெரியவில்லை
நீயே வந்து அருளும் யோகமும் எனக்கு இல்லை- பூரணமான
ஞானம் இல்லைஎவ்வகை உய்வேன்என்அம்மை ஆச்சியே

35 
  அருள்வாய் அன்னை நல் புத்தியும் உன் மேல்
 உறுதியான பக்தியும் உன்னை அடையும் சித்தியும் -என்றும்
உன்னை விட்டுபிரியாத யோகம்- நீயே உண்மை என்று
உணரும் ஞானமும் அருள்வாய்  என்அம்மையே ஆச்சியே

36 
காக்கும் சக்தியும் கருணை வடிவான என் அன்னை நீ இருக்க 
கை ஏந்தி பிறரிடம் செல்வது நான் முறையோ-கற்பகமே
கருணை புரிவாய் காத்து அருள்வாய் கவலைகளை தீர்ப்பாய்
கமலவல்லியே காமாட்சியே என் அன்னை அம்மை ஆச்சியே

37 
மூவாயிரம் விழிகள்கொண்ட என்அன்னை முண்டக்கண்ணி மாரியே
மூவரும் தேவரும் முனிவரும் போற்றும் முழுமுதற்ப் பொருளே
முக்தி சித்தி பக்தி சக்தி யோகம் அருளும் முத்து மாரியே இந்த
மூடனை காத்து அருள்வாய் மூகாம்பிகேயே என் அம்மை ஆச்சியே

38 
வாழ்க அன்னை உன் வள்ளல் குணம்
வளர்க உன் அருள் பெரும் திருக்அடியார் கூட்டம்
 அருள்க எங்கும் வளமும் நலமும்
மலர்க எவ்உயிரிடத்திலும் அன்பும் அமைதி 
என் அம்மை ஆச்சியே

39 
ஆடும் கூத்தன் நெஞ்சிலும் ஆனந்ததாண்டவம் ஆடுபவளே
ஆதிசக்தியே அஷ்ட சித்தி நாயகியே தில்லை காளியே
ஆவுடை நாயகியே அருள்வாய் அருள்வாய் அஷ்ட ஐஸ்வர்யங்கள்
ஆதிபராசக்தியே ஆதிமூலமே என் அம்மை ஆச்சியே

40 
வேண்டியவர்க்கு வேண்டிய வரம் அருளும் என் அன்னையே வேண்டுகிறேன் நலமும் வளமும் நின்திருஅருளும் அருள்வாய்
வேதவல்லியே  மாந்தர்கள் துயர் தீர்க்கும் கனகவல்லியே
வேம்புலி நாயகியே அன்னை என் அம்மை ஆச்சியே

41
கார்கால மேகம் கதிரை மறைத்தது போல –என்
கர்ம வினை நின் அருள் கதிரை மறைக்கிறதே
கர்ம வினைகளை போக்குவாய் கவலைகளை தீர்ப்பாய்
 கனக துர்க்கையே கலைவாணியே என் அம்மை ஆச்சியே
42 
ஈராயிரம் செவிகள் கொண்ட என் அன்னை ஈஸ்வரியே –இந்த
ஈன பிறவியின் அழு குரல் கேட்கவில்லையோ
ஈன்றவளே என்னை புறம் தள்ளுவது முறையோ

ஈர்எழு லோக நாயகியே என் அம்மைஆச்சியே

43 
நல்விதி எழுத நான்முகனுக்கு நல் மனம் இல்லை
நலிந்தவரைகளை காக்க நாரணர்க்கு நேரமில்லை
நல்வரங்களைஅருளும் நாகேஸ்வரனை நெருங்க வழி இல்லை
நல்வரம் அருள வா  நாராயணியே என் அம்மை ஆச்சியே

44 
அன்பு உள்ளம் கொண்ட அன்னையே உன் கையில் ஆயுதம் எதற்கு?
அடியவர்கள் படும் துயரம் கண்டும் அருளிட தயக்கம் எதற்கு?
அனுதினம் நின்னை துதித்திடும் அன்பர்களுக்கு துன்பம்  எதற்கு?
அருள்வாய் துயர் தீர்ப்பாய் ஆதரிப்பாய் என்றும் என் அம்மை ஆச்சியே

45  
பெற்ற பிள்ளைகளை பேணாத நாகத்தை தலைமேல் வைத்துகொண்டவளே
பித்தனின் நாயகியே சித்தம் கலங்கியவளா நீ?- என்று
பாரோர் உன்னை தூற்றுவதற்குல் உன் பாலகனை (என்னை)
பார்வதியே பவளவல்லியே காத்து அருள்வாய் என் அம்மை ஆச்சியே

கோமதியம்மன் 
46 
புற்றுமண்ணால் அன்பர் பிணி நீக்கும் புன்னைவன நாயகியே
புண்ணியம் செய்தோர் பாவம் செய்தோர் பேதம் இன்றி அருளும் 
 கோமதியேஆநிரைகளும் அரன்களும் சூழ பெற்ற ஆவுடை நாயகியே
ஆதரித்து அருள்வாய் கோமதியே என் அம்மை ஆச்சியே
47 
(திரு.வி.க நகர்  அருள்மிகு கோமதியம்மன் சென்னை-11)
ஆயிரம் திருத்தலங்கலக்கு சென்ற பலன்-அனுதினம்
ஆயிரம் முறை ஆண்டவன் திருநாமம் ஓதிய பலன்-என் அன்னை
ஆவுடை நாயகி கோமதி திருத்தலத்திற்கு பக்தியுடன் வருபவர்களுக்கு
அன்புடன் அவள் திருப்பாதம் பற்றியவருக்கு அன்றே அருள்வாள் மேற்சொன்ன பலன்

48
அம்மா என்று அன்புடன் அழைத்தும் அருள மனம் இல்லை
தாயே என்றும் கதறி அழைத்தும் தய புரியமனம் இல்லை
எங்குசெல்வேன் யாரை கேட்பேன் என் செய்வேன்
ஏன் இந்த பாராமுகம் ஏகவல்லியே என்அம்மை ஆச்சியே

49
நாகத்தால் கட்டுண்ட இரையைப்போல நலிந்து வாடுகிறேன்
நாரணியே மோகினியே நாடினேன் நின் திருவடி துணையே
நாளும் கோளும் அருளாத நன்மைகளை-என் அம்மை ஆச்சியே

நின் திருஅருளால் நன்மைகளை அருளி எந் நாளும் காப்பாயே 


50  Image result for amman photos 
நான்முகனால் துதிக்கப் பெற்று 
நாரணரை மோகனதுயிலிருந்து எழுப்பி
நல்மனம் இல்லா அரக்கர்களை அழிக்கசெய்து
நான்முகனை காக்க செய்தவளே
நாரணியே சூலினேயே  பூரணியே தாரிணியே 
என் அன்னைகோமதியே 

நாடி வந்து அருள்வாய் நாக நாயகியே
 என் அம்மை ஆச்சியே

51Image result for amman photos
சிந்திய உதிரத்தால் மீண்டும் உயிர்த்தெழும் 
சினமிகு அரக்கனை அழித்தவளே 
சீர்மிகு தவ வலிமையில் மதகொண்ட 
சும்ப நிசும்ப அரக்கரகளை அழித்தவளே 
சீர்மிகு முனிவர்களால்,தேவர்களால் துதிக்க்பட்டு
சீர்ய வரம் அளித்தவளே சிந்தாமணியே 
சிவசக்தியே சிங்காரியே சீரிய வாழ்வு அருள்வாயயே 
என் அம்மை  ஆச்சியே

52Image result for amman photos
தீவினை தீரும் காலம் எப்பொழுது திருவாய் அருளாயோ
திருமகளே அந்த திருநாளை அருளலோயோ என்றே அன்னையே 
திங்களும் கங்கையும் சூடியே திருநீலகண்டர் சக்தியே
திருவருள் நல்கி தீவனைகளைவாய் என் அம்மை ஆச்சியே

53Image result for amman photos
போற்றுபவர்  போற்றினால் தான் அருள்வாயோ என் அன்னையோ
போற்றினேன் நின் திருவடியை சொல் பாமாலையினால்
தூற்றுனேன் இன்னும் அருளவில்லேயே என்று ஆதங்கதுடன்
எதற்கும் இசையவில்லை என்செய்வேன் என் அம்மை ஆச்சியே

54 Image result for amman photos 
கடலில் கரைத்த உப்பை காண்பது ஏது  அன்னையே
கர்ம வினைகள் தீரும் காலம் எப்பொழுது ?
கருணைக்கடலே கந்தனின் அன்னையே 
காத்துருக்றேன் நின் திருவருளுக்குகாக
காலம்தாழ்த்தாமல் கருணை புரிவாய் 
என் அம்மை ஆச்சியே

56 Image result for amman photos
ஆளறி மேல் காரி அமர்ந்த நாள் 
முதல் தொடங்கிய துன்பங்கள்
காரி கருந்தேள் மேல் சென்று கொண்டு 
இருக்கும் இந் நாள் வரை
தீரவில்லை துன்பங்கள் கனியவில்லையே 
உன்மனது அன்னையே
கோள்களின் அதிபதியே என் மேல் 
கோபம் ஏன் என் அம்மை ஆச்சியே

57Image result for amman photos
ன் உள்ளக்குமறள்களும் என் உடல் நலிவுகளை அறியாத அன்னையா நீ
அண்ணலின் அருட்குறிப்பை அறிந்து புன்சிரிப்பால் கோட்டையை எரித்த
அன்னை கோமதியே என் உள்ளக்குறைகளையும் தீராயோ உமையவளே
உன் புன்சிரிப்பால் என் துயர்களை எரிப்பாயே என் அம்மை ஆச்சியே

58 Image result for amman photos 
எண்திசை அதிபதியே ஏழைக்கு அருளும் குணநிதியே
மண்ணில் உள்ள உயிர்களுக்கு மங்களம் அருளும் அன்னையே
இன்னல்கள் நிறைந்த இவ்வாழ்வில் இடர்களை களைந்து
இன்ப வாழ்வு அருள்வாய் மாகாளியே என் அம்மை ஆச்சியே

59 Image result for amman photos
உவர் நீரில் வாழும் சிப்பியில் தோன்றும் முத்தைப் போல்
  உமையவளே என் உள்ளத்தில் தோன்றிய ஒப்பற்ற முத்தே
உள்ளன்போடு உன் திருவடி சரண் அடைந்தேன் உபகாரியே
உன்னத வாழ்வு அருள்வாய் என் அம்மை ஆச்சியே

60 ஒளிரும் கதிர் ஒரு விழியாக குளிரும் மதி ஒரு விழியாக
எரிக்கும் கனல் முக்கண்ணாய் கொண்ட என் அன்னையே
மூவரும் முனிவரும் தேவரும் தொழும் மூலதார சக்தியே
முக்தி என்னும் சித்தி அருள்வாய் என் அம்மை ஆச்சியே

61 அந்தகன் கண்டு அஞ்சாத உயிர்கள் உண்டோ?அவனியில்
அந்தகனும் அஞ்சும் நின் திருவடி சரண் அடைந்தேன்
அருட்கருணை கடலே என் அன்னையே  அங்கையர்கன்னியே அடியவனை காத்து அருள்வாயே என் அம்மை ஆச்சியே




 (பாமாலைகள் வளரும்)
© 2014 ஸ்ரீ கோமதி தியான பூமி 
(c)copy right reserved sri gomathi dhiyanna bhoomi 

ஆக்கம் s.ஜெய வீர பத்ரன் 

                                               © 2014 sri gomathi dhiyanna bhoomi
http://www.myfreecopyright.com/register/emailValidation/276f334ddb3f36c2bb2f6dc8dfecaa53

No comments:

Post a Comment

Flag Counter

Followers